வெல்லத்தை ‘இந்த’ வகையில் சேர்த்துக் கொண்டால்... நோய்கள் அண்டாது..!!

குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதனால், இருமல், சளி போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். இதில் நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 31, 2023, 04:59 PM IST
  • வெல்லம் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது ஒரு இயற்கை இனிப்பு.
  • ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக வெல்லம் உள்ளது.
  • வெல்லத்தில் நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது.
வெல்லத்தை ‘இந்த’ வகையில் சேர்த்துக் கொண்டால்... நோய்கள் அண்டாது..!! title=

குளிர்காலம் என்பது சூடான உணவுகளை உண்ணும் பருவம், இந்த நேரத்தில் உங்கள் உடலுக்கு சூடு தரக்கூடிய பொருட்களை சாப்பிட ஆசை இருக்கும். அதே சமயம், குளிர்காலத்தில் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், வெல்லம் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இது ஒரு இயற்கை இனிப்பு. வெல்லம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. இதில் நுரையீரலை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது.  அதுமட்டுமல்லாமல், பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. இரத்த சோகை பிரச்சனைகளை நீக்கும். இதனுடன் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும். குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவது இருமல் மற்றும் சளி பிரச்சனைகளை குறைக்கும். குளிர்காலத்தில் வெல்லத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம். குளிர்காலத்தில் வெல்லம் சாப்பிடுவதற்கான 5 எளிய வழிகள் என்னவென்று பார்ப்போம்?

கடலை மிட்டாய்

வெல்லம் மற்றும் வேர்க்கடலை கொண்டு செய்யப்பட்ட கடலை மிட்டாய் குளிர் காலத்தில் உடலை சூடாக வைத்திருப்பதில் இருந்து இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குவதற்கு நன்மை பயக்கும். இது தவிர வெல்லம், வேர்க்கடலை இரண்டும் உடலில் கால்சியம் குறைபாட்டை நீக்கும். வெல்லம் மற்றும் வேர்க்கடலையை கடலை மிட்டாய்  அனைவருக்கும் பிடித்த ஒன்று என்பது கூடுதல் நன்மைகளை கொடுக்கிறது.

எள்ளுருண்டை

குளிர்காலத்தில் வெல்லம் மற்றும் எள் கொண்டு செய்யப்பட்ட எள்ளுருண்டை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் (Health Tips) கிடைக்கும். இதனால் உடலுக்கு கதகதப்பு கிடைக்கும். மேலும் இரத்த ஓட்டமும் மேம்படும். அதை உட்கொள்ள, எள்ளை சரியாக வறுக்கவும். அதன் பிறகு, அதில் வெல்லம் பாகு கலந்து எள்ளுருண்டை தயார் செய்யலாம். எள்ளுருண்டை சாப்பிட்டால் குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்

வெல்லம் கலந்த பால் 

குளிர்காலத்தில் பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதும் ஆரோக்கியமாக இருக்கும். வெல்லம் மற்றும் பால் கலவையானது உங்கள் உடலை சூடாக வைத்திருக்கும். இதன் மூலம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச்சத்து கிடைக்கும். குளிர்காலத்தில் உங்கள் உடல் நல பிரச்சனை கணிசமாக அதிகரித்தால், கண்டிப்பாக வெல்லம் கலந்த பால் சாப்பிடுங்கள்.

வெல்லம் சேர்த்த உளுத்தம்பருப்பு உருண்டை

வெல்லம் மற்றும் உளுந்து சேர்த்து சாப்பிடுவதும் குளிர்காலத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இது தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். இதை உட்கொள்ள, வெல்லத்துடன் நன்றாக வறுத்து பொடி செய்த கருப்பு உளுத்தம்பருப்பை சேர்த்து சேர்த்து சாப்பிடலாம்.

வெல்லம் மற்றும் இஞ்சி

இஞ்சி, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு பெறும். மேலும், வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதனை உட்கொள்ள, இஞ்சியைத் துருவி, அதில் வெல்லம் கலந்து, உணவுக்குப் பிறகு சாப்பிடவும். இதனால் பெரும் பலன் கிடைக்கும். இதனை இஞ்சி மொரப்பாவாகவும் தயாரித்து சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News