COVID-19 Update: மொத்த பாதிப்புகள் 93.51 லட்சம்; புதிய பாதிப்புகள் 41,322

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41,322 பேருக்கு புதிதாக தொற்று பரவியதை அடுத்து, மொத்த COVID-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 93,51,110 ஐ எட்டியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 28, 2020, 05:42 PM IST
  • இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 41,322 பேருக்கு புதிதாக தொற்று ப ஏற்பட்டுள்ளது.
  • மொத்த COVID-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 93,51,110 ஐ எட்டியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 485 பேர் தொற்றுநோயால் மரணமடைந்துள்ளனர்.
COVID-19 Update: மொத்த பாதிப்புகள் 93.51 லட்சம்; புதிய பாதிப்புகள் 41,322 title=

புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் 41,322 பேருக்கு புதிய கோவிட் -19  தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் பாதிப்புகளின் எண்ணிக்கை சனிக்கிழமை 4,54,940 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில், இதுவரை, மொத்தம்  93,51,110  பேருக்கு கொரோனா தொற்று (Corona Virus) பரவல் ஏற்பட்டுள்ளது, இதில் 87,59,969 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 485 பேர் இறந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,36,200 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,57,605 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், மொத்த பரிசோதனை எண்ணிக்கை 13,82,20,354 ஐ எட்டியுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது. 

மகாராஷ்டிராவில், 6,185 புதிய COVID-19 தொற்று பாதிப்பு, ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இம்மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,089 பேர்  குணம்டைந்துள்ளனர்.  85 இறந்து விட்டனர். மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 18,08,550 ஆக உள்ளது.

ALSO READ | Corona Virus உருவானதே இந்தியாவில்தான்: சீனா கூறும் அடுத்த கதை

டெல்லியில் (Delhi)  நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 5,482 புதிய தொற்று பாதிப்புகள் மற்றும் 5,937 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 5,56,744 ஆகக் கொண்டுள்ளது, இதில் 38,181 ஆக்டிவ் பாதிப்புகள் மற்றும் 5,09,654 பேர் குணமடைந்துள்ளனர்.  8,909 பேர் இறந்து விட்டனர்.

கேரளாவில் (kerala) சுமார் 3,966 புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 63,885 ஆகும். 

இதற்கிடையில், தடுப்பூசி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டார்.

அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பார்க் (Zydus Biotech Park) , ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் (Bharat Biotech) மற்றும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India, Pune, Maharashtra) ஆகியவற்றை அவர் பார்வையிடுகிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தின் ஒரு உறுதியான கட்டத்தில் இந்தியா நுழையும் போது, ​​மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மறுஆய்வு நடவடிக்கைகள் மற்றும் விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல்கள், ஆகியவை தடுப்பூசி தொடர்பாக இந்தியா சந்திக்கும் சவால்களை சமாளிக்க உதவும்" என பிரதமர் அலுவலகம் PMO கூறியது.

ALSO READ | Covid-19 Vaccine தயாரிக்கும் 3 நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்வார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News