டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை டெங்கு கடுமையாக பாதிக்கும்.
பகலில் கடிக்கும் ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்:-
* அதிக காய்ச்சல் (104 f போகலாம்)
* கடுமையான தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தசை வலி, சோர்ந்து போதல்
* உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிப்பது
* கண்ணின் பின்புறம் வலி
* தோலில் ஒரு வகை கலர் மாற்றம் ஏற்படுத்தும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தடுக்க என்ன வழிகள்:-
* டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.
* உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம்.