நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கு பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். அவர்களை பற்றி கீழே தெரிந்து கொள்ளுங்கள்...
தொப்பையை கரைக்கும் டயட் பிளான்
1. புரதம் நிறைந்த உணவுகள்
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் உடல் பருமனை குறைக்கும் டயட் பிளான் குறித்து கூறுகையில், சோயாபீன்ஸ், டோஃபு, நட்ஸ் போன்ற புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் என்கிறார். புரதம் நிறைந்த உணவை உண்பதன் மூலம், பசியை கட்டுப்படுத்தலாம் என்பதோடு, எடுத்துக் கொள்ளும் கலோரிகளும் மிக குறைவாக இருக்கும்.
ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்
2. சர்க்கரை உணவை குறைக்கவும்
சர்க்கரையில் பிரக்டோஸ் இருப்பதால் வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பை அதிகப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர் பானங்கள், செயற்கையாக சுவையூட்டப்பட்ட பழச்சாறுகள் மற்றும் இனிப்பு பானங்கள் உடல் பருமன் அபாயத்தை 60% அதிகரிக்கின்றன. எனவே அவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும்.
3. உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்கவும்
வெள்ளை சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பாஸ்தா, மைதா போன்ற பொருட்கள் கொழுப்பை அதிகரிக்கும். எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம். இவ்வாறு செய்வது தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. மாறாக பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
4. ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள்
காலை உணவைத் தவிர்க்கும்போது பசி அதிகமாகி, பின்னர் நம்மை அறியாமல் அதிகம் சாப்பிடுவதால், உடல் எடை கூடுகிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். காலை உணவில் ஓட்ஸ், அதிக புரோட்டீன் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தொப்பையை குறைக்க உதவும்.
ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!
5. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
பருப்பு வகைகள், முழு தானியங்கள், பட்டாணி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், செரிமானம் மேம்படுவதோடு வயிற்றில் கொழுப்பு சேராது. அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்
1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி
முதலில், சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும்.
இப்போது இரண்டு கால்களையும் முழங்கால்களில் ஒன்றாக மடக்கவும்.
பின்னர் 5 விநாடிகள் கைகளால் கால்களை பிடித்துக் கொள்ளுங்கள்.
பின், கால்களை நேராக்குங்கள்.
இதை 10-12 முறை செய்யவும்.
2. கத்தரிக்கோல் பயிற்சி
சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும்.
மெதுவாக வலது காலை கீழே கொண்டு வரவும்.
பின்னர் இடது காலை கீழே கொண்டு வரும்போது, வலது காலை உயர்த்தவும்.
இதை 10-12 முறை செய்யவும்.
3. பிளாங்க் (Plank)
முதலில் உங்கள் வயிறு தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ளுங்கள்
இப்போது கால்விரல்கள் மற்றும் கைகஐ ஊன்றிக் கொண்டு உடலை உயர்த்தவும்.
இந்த நேரத்தில், உங்கள் உடலை இறுக்கமாக வைத்திருங்கள்.
இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கவும்.
இதை 4-5 முறை செய்யவும்.
(பொறுப்பு துறப்பு:இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR