ஒரே வாரத்தில் ஈசியா எடை குறைய எளிய டயட் டிப்ஸ் இதோ: ஆச்சரியப்படுவீங்க

Weight Loss Tips: உடலில் தேங்கியுள்ள கொழுப்பை போக்க காலை முதல் இரவு வரை எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 6, 2024, 11:01 AM IST
  • உடல் எடையை குறைக்க காலை உணவில் பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து ஊறவைத்த ஓட்ஸை உட்கொள்ளலாம்.
  • இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
  • காலை உணவில் அதிக பழங்களைச் சேர்ப்பது எடை இழப்புக்கு நல்லது.
ஒரே வாரத்தில் ஈசியா எடை குறைய எளிய டயட் டிப்ஸ் இதோ: ஆச்சரியப்படுவீங்க title=

Weight Loss Tips: உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. ஆரோக்கியமற்ற உணவும் உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறையும் அவற்றில் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. அதனுடன் உடல் செயல்பாடும் குறைவாக இருந்தால், தொப்பை கொழுப்பு, இடுப்பு பகுதி கொழுப்பு என பல இடங்களில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் ஏற்படுகின்றது. 

நாம் உட்கொள்ளும் அதிக கலோரிகள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போது, ​​அது இடுப்பு, வயிறு, தொடைகள், முதுகு மற்றும் முகம் ஆகியவற்றிலும் தோன்றத் தொடங்குகிறது. தொப்பை கொழுப்பு (Belly Fat) உட்பட அனைத்து இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும் இந்த முயற்சிகளால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் (Weight Loss). அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு விஷயம் கண்டிப்பாக உதவும் என்றால் அது நாம் உட்கொள்ளும் உணவு. உடலில் தேங்கியுள்ள கொழுப்பை போக்க காலை முதல் இரவு வரை எந்த மாதிரியான டயட்டை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி இங்கே காணலாம். 

கொழுப்பை எரிக்க, காலை முதல் இரவு வரை பின்பற்ற வேண்டிய டயட் (Diet Chart for Weight Loss)

காலை உணவு

உடல் எடையை குறைக்க காலை உணவில் (Breakfast) பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து ஊறவைத்த ஓட்ஸை உட்கொள்ளலாம். இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். காலை உணவில் அதிக பழங்களைச் சேர்ப்பது எடை இழப்புக்கு நல்லது. 

மேலும் படிக்க | ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்க ஓமம் அவசியம்: இதில் இருக்கு எக்கச்சக்க நன்மைகள்

மதிய உணவு

மதிய உணவில் (Lunch) பச்சை காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மதிய உணவு புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த ஒரு சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். மதிய உணவில் கண்டிப்பாக பருப்பும் சாலட்டும் இருக்க வேண்டும். 

இரவு உணவு

இரவு உணவு (Dinner) மிகவும் இலகுவானதாக இருக்க வேண்டும். எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவு உணவை இரவு 7 மணிக்கு முன்பே உட்கொள்ள முயற்சிக்கவும். மேலும், உறங்குவதற்கு குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் முன்னதாக இரவு உணவை உட்கொள்வது நல்லது. 

உடற்பயிற்சி

உணவுடன் உடல் செயல்பாட்டிலும் அதிகப்படியான கவனம் தேவை. உடற்பயிற்சிகள், யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என ஏதாவது ஒன்றை கண்டிப்பாக தினமும் செய்ய வேண்டும். நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | H5N1 Virus : கொரோனாவை விட கொடிய நோய் பரவ வாய்ப்பு! பகீர் கிளப்பும் மருத்துவர்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News