எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்ட இளநீரை விரும்பாதவர்கள் சொற்பமே. ஆனால் நன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. அதுபோலத்தான் இளநீரிலும் அளவற்ற பயன்கள் இருந்தாலும் சில பக்க விளைவுகளும் உள்ளது. இளநீர் அதிகம் குடிப்பதால் உடலில் சில பக்க விளைவுகள் ஏற்படலாம், அதேபோல சிலருக்கு மட்டும் இளநீர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே அளவுக்கு மீறி இளநீர் குடிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
* இளநீரில் (Coconut Water) அதிகளவு எலக்ட்ரோலைட்ஸ்களான பொட்டாசியம் (Potassium), கார்போஹைடிரேட், சோடியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. எனவே இது உடலில் உள்ள நீரின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ளும். ஆனால் சில மருத்துவர்கள் இவை முழுமையாக ஹைடிரேஷன்க்கு உதவுவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே இதனை மட்டுமே நம்பி நீங்கள் இருக்க வேண்டாம்.
ALSO READ | இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை!
* உடல் பயிற்சி முடிந்தவுடன் இளநீர் குடிப்பதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது அவர்கள் உடலுக்கு போதுமான ஆற்றலை தருகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் சாதாரண தண்ணீர் கொண்டிருக்கும் நீரேற்ற பண்புகள் இளநீரில் இல்லை.
* ஆய்வுகளின் படி இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. எனவே இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இதனை குடிக்கும் போது இது அவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
* சிஸ்டிக் பைப்ராஸிஸ் என்பது இரத்தத்தில் உப்பின் அளவை குறைவாக இருப்பதாகும். சிலர் இதனை சரி செய்ய மருந்துகளை எடுத்து கொள்ளவேண்டும் குறிப்பாக சோடியம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளநீரில் சோடியத்தை விட பொட்டாசியமே அதிகம் உள்ளது. எனவே இது எந்த வகையிலும் உங்கள் உடலில் உப்பின் அளவை அதிகரிக்க உதவாது.
* கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் பெண்களும் இளநீர் அதிகமாக குடிப்பது பாதுகாப்பானதல்ல. அதிகளவு இளநீர் குடிப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
* இளநீரில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. உடலில் அதிகளவு பொட்டாசியம் இருந்தால் அது சிறுநீரின் மூலம் வெளியேற்றபடும். ஒருவேளை உங்களுக்கு சிறுநீரக கோளாறுகள் இருந்தால் இந்த வேலை சரியாக நடக்காது. எனவே சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்.
* ஒரு டம்ளர் இளநீரில் 46 கலோரிகள் இருக்கிறது. அதே போல் பாட்டில்களில் அடைக்கப்பட்ட இளநீரில் இருமடங்கு கலோரிகள் இருக்கும். எனவே அதனை வாங்கி நீங்கள் குடிக்கும்போது அது உங்கள் எடையை அதிகரிக்கும்.
ALSO READ | இளநீர் மற்றும் கருப்பட்டி குளிர்பானம் தயாரிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR