Health Alert: இவர்கள் மஞ்சள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், பக்க விளைவுகள் ஜாக்கிரதை

நாம் எப்போது மஞ்சளை உட்கொள்ளலாம், எப்போதும் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 09:38 PM IST
  • சில நபர்கள் மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • தொடர்ந்து மூக்கில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
  • சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பின்னரே மஞ்சளை உட்கொள்ள வேண்டும்.
Health Alert: இவர்கள் மஞ்சள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், பக்க விளைவுகள் ஜாக்கிரதை title=

மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சில சூழ்நிலைகளில், மஞ்சள் நம் உடலுக்கு விஷம் போல் தீங்கு விளைவிக்கும். ஆகையால், நாம் எப்போது மஞ்சளை உட்கொள்ளலாம், எப்போதும் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நபர்கள் மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

சர்க்கரை நோயாளிகள்:

நீரிழிவு நோய்க்கு (Diabetes) சிகிச்சை பெறுபவர்களுக்கு பொதுவாக இரத்தத்தை மெலிதாக வைத்திருக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இவர்கள் மஞ்சளை அதிக அளவில் உட்கொண்டால், இரத்தத்தின் அளவு மிகவும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மஞ்சளை சாப்பிட வேண்டாம்

மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் (Turmeric) சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நோய் குணமான பிறகும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே மஞ்சளை உட்கொள்ளத் தொடங்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் உடல்நிலை மோசமாகிவிடும்.

சிறுநீரக கல் உள்ளவர்கள்

அடிக்கடி சிறுநீரக கல் (Kidney Stone) பிரச்சனை ஏற்படும் நபர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பின்னரே மஞ்சளை உட்கொள்ள வேண்டும்.

இரத்தப்போக்கு பிரச்சனை 

திடீரென அல்லது தொடர்ந்து மூக்கில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். இதனுடன், வேறு ஏதேனும் இரத்தப்போக்கு பிரச்சனை அல்லது நோய் உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது. அல்லது மிகச் சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் மஞ்சள் இரத்தம் உறைதல் செயல்முறையை குறைக்கிறது.

ALSO READ | Healthy Fruit: அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தரும் ஸ்ட்ராபெர்ரி 

ALSO READ | Radish: BP முதல் மஞ்சள் காமாலை வரை; பல வித நோய்களுக்கு அருமருந்தாகும் முள்ளங்கி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News