விஜய் மாநாட்டிற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? விசாரிக்கும் உளவுத்துறை!

கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக உளவுத்துறை விசாரணை செய்து வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Nov 19, 2024, 02:18 PM IST
    அக்.27ம் தேதி நடைபெற்ற விஜய்யின் மாநாடு.
    10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
    விசாரணை செய்து வரும் உளவுத்துறை.
விஜய் மாநாட்டிற்கு எப்படி இவ்வளவு கூட்டம் வந்தது? விசாரிக்கும் உளவுத்துறை! title=

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கட்சிப் பாடல், கொடி என ஒவ்வொன்றாக மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் விஜய்யின் தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிக அளவு கூட்டம் சேர்ந்தது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. 

மேலும் படிக்க | டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகமாக மது விற்பனை! 16 ஊழியர்கள் சஸ்பெண்ட்! புகார் செய்வது எப்படி?

தமிழகம் தாண்டி தேசிய அளவிலும் விஜய்யின் மாநாடு பேசப்பட்டது, காரணம் விஜய் இந்த மாநாட்டில் பேசியிருந்த சில கருத்துக்கள் தான். தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை தமிழக மக்களுக்கு விஜய் தெரிவித்து இருந்தார், அதில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக விமர்சனம் செய்திருந்தார். திராவிட மாடல் என்று கொள்ளை அடிக்கும் ஆட்சிதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும், எனக்கு கலர் அடிக்க முடியாது.. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை வீழ்த்தலாம்னு கனவுல கூட நினைச்சுறாதிங்க என்று விஜய் பேசியிருந்தார். 

திமுக என்று நேரடியாக சொல்லவில்லை என்றாலும் மறைமுகமாக சாடியிருந்தார் விஜய். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முக ஸ்டாலின் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என்று பேசி வருகின்றனர். தேவையில்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பேசியிருந்தார். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பேசி இருந்தது தற்போது இருக்கும் கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு திருமாவளவன் நேரடியாக பதில் சொல்லி இருந்தார், சில வார்த்தை தாக்குதல்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார். 

உளவுத்துறை விசாரணை 

விஜய்யின் மாநாட்டில் எப்படி இவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எந்தெந்த ஊர்களில் இருந்து எவ்வளவு பேர் வந்தனர், இவர்களை ஒருங்கிணைத்து மாநாட்டிற்கு கூட்டி வந்தது யார்? சென்னையில் இருந்து எவ்வளவு பேர் வந்தார்கள்? இந்த மாநாட்டிற்கு பணம் எங்கிருந்து வந்தது? எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது? போன்றவற்றை தமிழக உளவுத்துறை விசாரித்து வருவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாகவே மற்ற அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை உளவுத்துறை விசாரணை செய்து அரசுக்கு தெரிவிக்கும். அதேபோல் தான் விஜய்யின் கட்சியின் நடவடிக்கைகளை தற்போது உளவுத்துறை விசாரித்து வருகிறது.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்... குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை லோன் - யாருக்கு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News