மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்வதால் வழக்கத்தைக் காட்டிலும் அதிக திருப்தி ஏற்படுவதாக ஆய்வில் புதிய தகவல்....
மனிதனாய் பிறந்து திருமணம் ஆனா தம்பதிகள் அனைவருக்கும் இருக்கு பல கேள்விகளில் ஒன்று மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா... கூடாதா?... என்பது தான்.
அதிலும் சிலருக்கு மாதவிடாய் காலத்தில் உடலுறவா என முகம் சுழித்தபடி கேள்வி எழலாம். ஏனென்றால், அது பெண்களுக்கும் சற்று சங்கடமாக இருக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்வதால் இயல்பை விட அதிக திருப்தி ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், மாதவிடாய் காலங்களில் உடலுறவு மேற்கொள்ளலாம். ஆனால் அது இருவரின் விருப்பத்தைப் பொருத்தது. பெண்ணின் உடல் சவுகரியத்தைப் பொருத்தது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு பாலியல் உணர்வு அதிகமாக இருக்கும். இந்த உணர்வு மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஏற்படும்.
மாதவிடாயின் போது மேற்கொள்ளப்படும் உடலுறவை செயற்கை மழையில் நனைந்த படி ஷவரில் மேற்கொள்ளலாம். அது இன்னும் சவுகரியமாக இருக்கும். மெத்தையில் மேற்கொள்வதானால் மெத்தையின் மேல் ஏதேனும் துணி அல்லது ரப்பர் ஷீட் விரிப்புகளை பயன்படுத்துங்கள் அல்லது மெத்தையைப் பயன்படுத்தாமல் தரையில் மேற்கொள்ளலாம்.
மாதவிடாய் கால உடலுறவால், கருத்தரிப்பதைத் தடுக்க கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம். செக்ஸ் பொசிஷன்களை கையாளும்போது, உங்கள் மனைவிக்கு சவுகரியமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அவருக்கு வலி ஏற்படுவதாக இருந்தால் தவிர்த்துவிடுவது நல்லது.