Beauty Tips: முகத்தழும்புகளை ஒரே வாரத்தில் நீக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்

வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அழகை பராமரிக்கலாம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2021, 12:26 PM IST
  • முகத்தழும்புகளை நீக்க வேண்டுமா டிப்ஸ்
  • முகப்பருவை போக்க பாட்டி வைத்தியம்
  • தழும்பை போக்கும் பூண்டு
Beauty Tips: முகத்தழும்புகளை ஒரே வாரத்தில் நீக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ் title=

புதுடெல்லி: அகத்தின் அழகை முகமே வெளிக்காட்டும் என்றாலும், தழும்புகளும் பருக்களும் அதற்கு தடையாக இருக்கும் என்ற குறை பலருக்கும் உண்டு. ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள தழும்புகள், பருக்களை இயற்கையான முறையில் போக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே அழகை பராமரிக்கலாம் என்பதற்கு உதாரணம் நமது குடும்பத்திலேயே இருப்பார்கள்.  நமது பாட்டியின் கைவைத்தியத்தைக் கேட்டு, பின்பற்றினாலே ஆரோக்கியத்தையும் அழகையும் நன்கு பராமரிக்கலாம்.

நமது முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் தழும்புகளை மறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகளில் சருமத்தைப் பராமரித்தால், பல வருடங்கள் சருமம் அழகாகவும், இளமையுடனும் இருக்கும். பெர்ரி பழ வகைகள் முகத்திற்கு பொலிவு கொடுப்பவை. அவற்றை உண்பது ஆரோக்கியத்திற்கு நன்மை என்றால், அதை சருமத்தில் பயன்படுத்தினால் முகப்பொலிவு பிரகாசிக்கும். 

கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகளில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

ALSO READ | கூந்தல் உதிர்வதை தடுக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ்

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் தண்ணீரை சேர்த்து கலவையாக்கி முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்துவிட்டு கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவு பெறும் (Beauty Tips), அழகு மிளிரும். 

பலவிதங்களில் பயன் தரும் எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் காயவிடவும். பிறகு முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள தழும்புகளும், பருக்களும் அகலும்.

ஆரோக்கியத்திற்கு அருமருந்தான பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள கறைகளை எளிதில் போக்க வல்லது. ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் கறைகள் மங்கும்.

அதே போல், ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாக்கும். 

READ ALSO | காலையில் வெறும் வயிற்றில் 2 வாதுமைக் கொட்டை! செய்யும் மாயங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News