உடல் எடையை குறைக்க இந்த இலையை தினமும் சாப்பிடுங்க

Curry Leaves Weight Loss: உடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 9, 2022, 02:49 PM IST
  • கறிவேப்பிலை மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது
  • நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
  • இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நீரிழிவு எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன
உடல் எடையை குறைக்க இந்த இலையை தினமும் சாப்பிடுங்க title=

மாறிவரும் வாழ்க்கைமுறையில் எடை அதிகரிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைத்து விதமான டிப்ஸ்களை பின்பற்றியும் கூட, உங்கள் எடை குறைவதில்லை என்றால், நீங்கள் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் எடை குறைவதற்கு பதிலாக அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதன்படி உடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்., அப்படி உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க நினைத்தால் இன்று முதல் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

பொதுவாக நாம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும் உணவை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு கறிவேப்பிலை ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஆரோக்கியமான நார்ச்சத்தை வழங்குகிறது, அத்துடன் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்

எடை குறைக்கும் கறிவேப்பிலை
கறிவேப்பிலை இந்திய உணவில் சேர்க்கப்டும் ஒரு அத்தியாவசிய பொருள். ஆனால் மக்கள் அவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதில்லை. உண்மையில், மக்கள் கறிவேப்பிலை சாப்பிடுவதில்லை, காரணம் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது என்று மட்டுமே நம்புகின்றனர். உணவை சாப்பிடும்போது, கறிவேப்பிலையை குப்பையாய் தூக்கி எறிகின்றனர். ஒருவேளை நீங்களும் இதைச் செய்தால், இன்று முதல் அதை நிறுத்துங்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவது எப்படி
தினசரி உணவில் கறிவேப்பிலை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். ஆனால் உணவை உண்ணும்போது அதை உண்ணக்கூடாது. மாறாக, ஒரு டீஸ்பூன் தேனை ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை சாறுடன் கலந்து குடிக்கலாம். 

தேன் மற்றும் எலுமிச்சை போன்ற சோர்பெட் கலந்து கறிவேப்பிலை சாறினை குடிக்கலாம். எடை இழக்க கறிவேப்பிலை உட்கொள்ளும் போதெல்லாம், சர்க்கரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கறிவேப்பிலை நன்மைகள்
* இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பொருட்கள் கறிவேப்பிலையில் உள்ளன.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை உட்கொள்ளுதல் நல்லது.
* கறிவேப்பிலை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து குறைவு.
* உணவில் கறிவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் உடலின் நச்சுகளும் நீங்கும்.
* சிறுநீரக சுத்திகரிப்புக்கு கறிவேப்பிலை மிகவும் நன்மை பயக்கும்.
* நீங்கள் கறிவேப்பிலை உட்கொள்ளும்போது, ​​உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகிறது.
* செரிமான பிரச்சினைகள் தொடர்ந்தால், கறிவேப்பிலை அதற்கு நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மூளையின் செயல் திறனை பாதிக்கும் ‘5’ ஆபத்தான உணவுகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News