தினையா முந்திரியா? போட்டியில் ஜெயிப்பது ஆரோக்கியத்தின் ராணி சிறுதானியம் ‘தினை’

Millets For Fertility: கொழுப்பு சத்து இல்லாத தானியம் எது என்று கேட்டால், அதில் முந்திரிக்கொட்டையாய் முந்தி வருவது தினை தான்... குறைவான விலையிலேயே விலை உயர்ந்த முந்திரியின் அனைத்து பண்புகளையும் கொண்டது இந்த சிறுதானியம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2023, 05:43 PM IST
  • கொழுப்பு சத்து இல்லாத தானியம்
  • குறைவான விலையில் வளமான சத்துக்கள்
  • சிறுதானியங்களின் ராணி தினை அரசி
தினையா முந்திரியா? போட்டியில் ஜெயிப்பது ஆரோக்கியத்தின் ராணி சிறுதானியம் ‘தினை’ title=

Foxtail Millet: தினை நார்ச்சத்து நிறைந்த தானியம். தினையை தினசரி ஒருவேளை சாப்பிட்டாலே ஆரோக்கிய குறைபாடுகள் எதுவும் வராது. அதுமட்டுமல்ல, ஆண்மை குறைபாட்டை போக்கும் வல்லமை கொண்டது தினை. தினையை மாவாக அரைத்து, அதில் பசும் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் வலுப்பெறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும், விந்து வீரியமாகும் என்பது பண்டைக்காலம் தொட்டு தொடரும் நம்பிக்கை ஆகும்.

தினைக்கு, வேறு பல பெயர்களும் உண்டு. சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னரே தினை உலகில் முக்கிய உணவாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வயதானவர்களும் தினையை தொடர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தால், 60 வயதிலும் ஆண்மை பொங்கும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

மேலும் படிக்க | Wheatgrass: இரத்த அழுத்தத்தை ஓட விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!

 தினை தானியத்தில் அதிக புரதம் உள்ளது. உடலில் தசைகளை நன்கு வலுபெற செய்ய வைக்கும் பண்புகளைக் ஒண்ட தினை, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. தன்மையை அதிகரித்து இளமையை நீண்ட நாள் வரை நீட்டிக்கும் தன்மை கொண்டது தினை. 

தினையில் கொழுப்பு சத்து இல்லை. தினையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாது. கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் வைட்டமின்கள் நார்ச்சத்து என பல ஊட்டச்சத்துக்களை ஒரே இடத்தில் கொண்டது தினை.   

தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது தினை. அதேபோல், மன அழுத்தம், கோபம், கவலை போன்ற உணர்வுகளை குறைக்கக்கூடிய பண்புகளையும் கொண்டது.

மேலும் படிக்க | எக்கச்சக்கமா கொழுப்பு இருக்கா? தினமும் இதை சாப்பிடுங்க.. சட்டுனு குறைக்கலாம்

இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் செயல்பாட்டை உறுதி செய்யும் வைட்டமின் பி 1 சத்து தினையில் அதிகமாக உள்ளது. விட்டமின் பி சத்து அதிகம் கொண்ட தினையை தொடர்ந்து சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் உறுதியாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகம் மிகுந்த அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு தினையை சாப்பிடுவது நல்லது.  

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு தேவையான பழங்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் மாதுளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News