இந்த ஒரு பழம் போதும், உடல் எடை வேகமா குறையும்

Belly Fat Burning Tips: உங்கள் வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் உணவு மற்றும் பானங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 23, 2022, 11:18 AM IST
  • எடை குறைக்கும் பழம்
  • தொப்பை கொழுப்பை குறைக்க டிப்ஸ்
  • எடை குறைப்புக்கு ஆரஞ்சு பழம்
இந்த ஒரு பழம் போதும், உடல் எடை வேகமா குறையும் title=

உடல் எடையை குறைப்பது என்பது எளிதானது அல்ல, இதற்கு சரியான உடல் செயல்பாடுகளுடன், சரியாக சாப்பிடுவதும் மிகவும் முக்கியம், ஏனென்றால் ஆரோக்கியமான உணவு நல்ல ஆரோக்கியத்திற்கான முதல் படியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் இந்த குறிப்பிட்ட பழம் உங்களின் உடல் எடையை ஜெட் வேகத்தில் குறைக்க உதவும். எனவே அவை எந்த பழம் என்பதை தெரிந்து கொள்வோம், அதை சாப்பிடுவதன் மூலம் வயிறு மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பு எவ்வாறு குறையும் என்பதை பார்ப்போம். அத்துடன் இந்த செயல் முறை உடலுக்கு பல வழிகளில் பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு சாப்பிட்டால் உடல் எடை குறையும்
இந்த நிலையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ் கூறுகையில், ஆரஞ்சு சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்கிறார். ஆம்., இந்த பழத்தில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, எனவே இவை உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடிதல் பலன் பெற இந்த பழத்தை ஜூஸ் வடிவில் குடிப்பதற்கு பதில் அப்படியே உரித்து சாப்பிடவும்.

மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்

உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை இந்த வழியில் பயன்படுத்தலாம்

1. செரிமானத்தை எளிதாக்கும்
ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆரஞ்சு சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி ஏற்படாது, வயிற்று உபாதையும் வராது. இதனால் செரிமான அமைப்பு சரியாக இருந்தால் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.

2. உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்
ஆரஞ்சு பழத்தில் உள்ள நீர்ச்சத்து 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, அதனால்தான் இந்த பழத்தை உட்கொள்வது உங்கள் உடலை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். எடை இழப்பு செயல்பாட்டில் உடலில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதால், எடையைக் குறைப்பதில் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.

3. சர்க்கரையின் தாக்கத்தை குறைக்கும்
சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமன் அதிகரிக்க ஒரு பெரிய காரணம், தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால், இனிப்புகள் மீதான ஆசையை குறைக்கலாம். இதனுடன், உயர் இரத்த அழுத்தத்திலிருந்து விடுபடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

4. உடல் டீடாக்ஸ்
ஆரஞ்சு பழத்தை டெடாக்ஸ் உணவு என்றும் அழைப்பர், இதை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாக இருப்பதால், கூடுதல் கொழுப்பைக் குறைப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News