விட்டிலிகோ என்னும் சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக செயல்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பினை, சமீபத்திய ஒருமித்த கருத்துக்களை மையமாகக் கொண்டு கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல் மற்றும் கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். அதேபோல் உலக மக்கள்தொகையில் 0.5 சதவீதம் முதல் ஒரு சதவீதம் பேர் விட்டிலிகோவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் இந்தியாவில் இது மக்கள் தொகையில் 8.8 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய நடிகை மம்தா மோகன்தாஸ், விட்டிலிகோ என்ற ஆட்டோ இம்யூனே நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!
விட்டிலிகோவின் அறிகுறிகள்
விட்டிலிகோவை அடையாளம் காண்பதற்கான ஆரம்ப அறிகுறி தோல் நிறமாற்றம் மற்றும் அந்தப் பகுதியில் முடி நரைப்பது. உடலில் வெள்ளைப் புள்ளி ஏற்பட்டு, அதன் பிறகு எங்காவது காயம் ஏற்பட்டு, அந்த இடமும் வெள்ளையாக மாறினால், உடலில் இந்தப் பிரச்னை வேகமாக அதிகரித்து வருவதைப் புரிந்து கொள்ள வேண்டும். விட்டிலிகோ நோய் எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய் அல்ல, மேலும் இது ஒரு தொற்று நோயாகும் சிலருக்கு இருக்கலாம். இந்த பிரச்சனையை ஆயுர்வேத வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம்.
விட்டிலிகோவிற்கு வீட்டு வைத்தியம்
* வெள்ளைப் புள்ளி பிரச்சனை உள்ளவர்கள், இரவில் செம்பு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, காலையில் எழுந்தவுடன் குடிக்க வேண்டும்.
* கேரட், பாகற்காய், துவரம்பருப்பு போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
* தினமும் இரண்டு முதல் நான்கு பாதாம் பருப்புகளை உட்கொள்ளுங்கள்.
மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் நன்மை பயக்கும்: மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து செய்யப்பட்ட கலவையை கறை படிந்த இடத்தில் தடவினால், கறை குறைய ஆரம்பிக்கும்.
வேப்ப இலை மற்றும் தேன்: வேப்ப இலையை பேஸ்ட் செய்து அதன் சாறு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுங்கள்.
விட்டிலிகோ உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
விட்டிலிகோ உள்ளவர்கள் ஆல்கஹால், மஞ்சள், நெல்லிக்காய், தயிர், கடல் மீன், திராட்சை, ஊறுகாய், சிவப்பு இறைச்சிகள், கத்திரிக்காய், மாதுளம்பழம், புளிப்புத் தன்மையுள்ள உணவுகள், பேரிக்காய், தக்காளி, பூண்டு, வெங்காயம், பப்பாளி, காபி, சாக்லெட் சார்ந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா... உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ