கறிவேம்பு ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் அள்ள அள்ளக் குறையாத நன்மைகள்

Curry Leaves Medicinal Properties: உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும் அமிர்த சுரபி கறிவேம்பு... வேம்பின் அனைத்து நன்மைகளையும் கொண்ட கறிவேம்பை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் என்ன நன்மை?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 14, 2022, 02:35 PM IST
  • செரிமானத்தை மேம்படுத்து கறிவேப்பிலை
  • தலைவலி மற்றும் இதய நோய்களைத் தடுக்கும் கறிவேப்பிலை
  • ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த கறிவேம்பு
கறிவேம்பு ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் அள்ள அள்ளக் குறையாத நன்மைகள் title=

உணவு வகைகளில் என்ன சேர்த்துக் கொள்கிறோம் என்பது நமது உணவை ஊட்டச்சத்து மிக்கதா அல்லது சத்தற்றதா என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் கறிவேம்பு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும் அமிர்த சுரபி என்று கூறலாம். பல்வேறு மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்ட கறிவேப்பிலை பல வகைப்பட்டது. மலைக் கறிவேப்பிலை என்பது வாசமில்லாததாக இருக்கும். அருமையான மணம் மிக்க செங்காம்பு ரகம், அதிக அளவு விளையும் வெள்ளைக்காம்பு ரகம் என பல ரகங்களைக் கொண்டது. 

பண்டைய காலம் முதல் நம் உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும் கறிவேப்பிலை தன்னகத்தே பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் நுகர்வால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. நன்மை செய்வது மட்டுமே கறிவேப்பிலையின் வேலை ஆகும். 

கறிவேப்பிலையை (Curry-Leaves) அவ்வப்போது பயன்படுத்தினால், உடலின் சர்க்கரை அளவு குறையும், செரிமானம் மேம்படும். தலைவலி, இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது. தோல் மற்றும் கூந்தலின் அழகையும் இது மேம்படுத்தும். கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. அவை பல நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. 

மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்! 

உடலில் இரத்தம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தின் பற்றாக்குறையை சரி செய்கிறது கறிவேப்பிலை. இரும்புச் சத்தை உறிஞ்சும் திறன் குறைந்தால் நமக்கு ரத்தசோகை ஏற்படுகிறது. இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த கறிவேப்பிலை இரத்த சோகைக்கு அருமையான மருந்தாக செயல்படுகிறது. 

கறிவேப்பிலையை தினமும் பயன்படுத்தும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டு உணவில் இருக்கும் ஸ்டார்சை குளுக்கோஸாக மாற்றும் என்பதால், சர்க்கரை அளவை சமன்படுத்துவதில் உடலுக்கு உதவி கிடைக்கிறது.  

கறிவேப்பிலை கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. மேலும் கறிவேப்பிலை பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. கறிவேப்பிலையில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் மேற்பரப்பைக் குறைக்க உதவும் பொருட்கள் உள்ளன.

கறிவேப்பிலை இளநரையைத் தடுக்கிறது. கூந்தலில் ஷாம்பு கண்டிஷனர் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைத் கறிவேப்பிலை தடுக்கிறது. தலைமுடி அடர்த்தியாக வளரவும் கறிவேப்பிலை பயன்படுகிறது 

கறிவேப்பிலையில் போதுமான அளவு வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை காணப்படுகின்றன. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 'அந்த’ விசயத்துக்கு மட்டுமில்ல! ‘உடல் பருமன்’ பிரச்சனையையும் தீர்க்கும் அத்திப்பழம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News