தமனிகளை அடைக்கும் உணவுகள், நமது இரத்த நாளங்களின் தமனிகளைத் தடுக்கும் வகையில் செயல்படும். இதுபோன்ற பலவற்றை ஆரோக்கியமானவை என்று நினைத்துக் கொண்டு நாம் உண்கிறோம். ஆனால், மாறுவேடமிட்டு வரும் உணவுகளை உண்பதால், உடலுக்கு கண்டிப்பாக ஆரோக்கியக் குறைவு ஏற்படும். எந்தெந்த ஆரோக்கியமான உணவுகள் நமக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
ஆரோக்கியத்திற்கு மோசமான உணவுகள்
நமது உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் இரத்தம் அவசியம், ஏனென்றால் இரத்தத்தின் மூலம் மட்டுமே உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்வதில் இரத்த நாளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால்தான் இந்த இரத்த நாளங்களை உள்ளே இருந்து சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், இதனால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சாதாரணமாக போதுமான இரத்தம் கிடைக்கும்.
சில நேரங்களில் தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, நமது தமனிகளில் அழுக்கு சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே மாரடைப்பு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு முறை மூலம் இந்த இரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருக்க முடியும். உண்மையில் நமது இரத்த நாளங்களை அசுத்தம் செய்யும் உணவுகளின் பட்டியலில் மிகவும் முக்கியமானவற்றை தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வாழைப்பழம் முதல் அவகோடா வரை: ஆரோக்கியத்தை உயர்த்தும் 7 பொட்டாசியம் உணவுகள்
அரிசி சாதம்
பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியில் சத்துக்கள் சுத்தமாக இல்லாமல் போய்விடுகின்றன. பட்டை தீட்டப்பட்ட அரிசியை நாம் உண்பதால், அது, உடலில் விரைவாக உறிஞ்சப்பட்டு சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பது மிகச் சிலருக்குத் தெரியும். வெள்ளை அரிசியை அதிகம் உட்கொள்பவர்களுக்கு அவர்களின் தமனிகளின் உட்புறச் சுவர் தடித்து வீங்கும் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சர்க்கரையை உட்கொள்வது நமக்கு நாமே செய்துக் கொள்ளும் மிகப் பெரிய தவறு என்பது பெரும்பாலும் பலருக்கும் புரிவதில்லை. இரத்த நாளங்களுக்கு மிகப்பெரிய எதிரிகளில் ஒன்றாக மாறிவிட்ட சர்க்கரையை, குறைந்தபட்சம் ஓரளவாவது கட்டுப்படுத்துவது முக்கியம் ஆகும். அதிக சர்க்கரையை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை ட்ரைகிளிசரைடு வடிவில் நரம்புகளில் சேரத் தொடங்குகிறது.
முட்டையின் மஞ்சள் கரு
முட்டை ஆரோக்கியமான உணவு என்றாலும், முட்டையின் மஞ்சள் கரு உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும். முட்டையின் மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிடுவதால், தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் குவிந்துவிடும். மேலும், இதில் உள்ள Phosphatidylcholine என்ற தனிமம், தமனிகளில் அழுக்குகளை படிய வைக்கும்.
மேலும் படிக்க | கம்முன்னு கம்பு சாப்பிட்டா, டாக்டர்கிட்டயே போக வேண்டாம்! கம்பு: அ முதல் .'. வரை...
மாவு பொருட்கள்
இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் ஆரோக்கியமாக இருக்க, வெள்ளை மாவில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதை நிறுத்துவது மிகவும் முக்கியம். வெள்ளை ரொட்டி முதல் பிஸ்கட் வரை அனைத்தும் மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனுடன், சந்தையில் கிடைக்கும் பல உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளும் சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை உடல் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள்
ஆரோக்கியமற்ற கொழுப்பு நமது ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரியாக மாறி வருகிறது. வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் முதல் ஐஸ்கிரீம் போன்றவற்றில் நிறைய ஆரோக்கியமற்ற கொழுப்பு காணப்படுகிறது, இது நமது இரத்த நாளங்களில் அழுக்குகளை நிரப்ப வேலை செய்கிறது.
மக்கள் இதுபோன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் ஆரோக்கியமானவை என்று கருதுகின்றனர், ஏனெனில் அவை வீட்டில் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் உண்மையில் வீட்டில் தயாரிக்கப்பட்டாலும், வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் ஆரோக்கியத்தை சீர்குலைப்பவை. எனவே, தயவு செய்து கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ