கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்!

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தீய பழக்கவழக்கங்களால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 11, 2022, 06:01 AM IST
  • இரண்டு இந்தியர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் மாரடைப்பு நிலைமை ஏற்படலாம்.
  • உடற்பயிற்சி செய்வது கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் உணவுகள்! title=

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது ஆபத்தான ஒன்று, அதனை கட்டுக்குள் வைக்க நாம் சில பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும்.  உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் மாரடைப்பு, இதய நோய்கள் அல்லது பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைமை ஏற்படலாம்.  ஒரு கணக்கெடுப்பின்படி, இரண்டு இந்தியர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.  சாதாரணமாக ஒருவரது உடலில் இருக்க கொலஸ்ட்ரால் அளவை பற்றி பார்ப்போமேயானால் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு 170 mg/dL ஐ விடக் குறைவாகவும், வயதானவர்களுக்கு 125-200 mg/dL ஆகவும் இருக்க வேண்டும்.  எல்டிஎல் கொழுப்பானது 19 வயது அல்லது அதற்கு கீழ்110 mg/dL ஐ விடக் குறைவாகவும், 19 வயது அல்லது அதற்கு மேல் 100 mg/dL க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.  

ஹெச்டிஎல் கொழுப்பானது 45 mg/dL 19 வயது அல்லது அதற்குக் கீழே 45 mg/dL மற்றும் ஆண்களுக்கு 40 mg/dL அல்லது அதற்கும் அதிகமாகவும், 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 mg/dL அல்லது அதிகமாகவும் இருக்கும்.  கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சிகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகள், நொறுக்கு தீனிகள், கேக்குகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.  அதற்கு பதிலாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள், கிட்னி பீன்ஸ், ஓட்ஸ் மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ளலாம்.  உடற்பயிற்சி செய்வது நம்மை சுறுசுறுப்பாக இயங்கவைப்பதோடு, கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.  

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் உதாரணமாக நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுறுப்பாக விளையாடுதல் போன்ற எளிய பயிற்சிகள் கூட செய்யலாம் கடினமான பயிற்சிகள் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.  மேலும் உடற்பயிற்சி செய்வதால் உடலிலுள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் ஃபிட்டாக இருக்கிறது.  புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தீய பழக்கவழக்கங்களால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.  இந்த தீய பழக்கங்களை கைவிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறைவு மட்டுமல்லாமல் ரத்த ஓட்டம் சீராவது, நுரையீரல் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் போன்றவை மேம்படுகிறது.  ஸ்டேடின், நிகோடினின்க் அமிலம், ஃபைப்ரிக் அமிலம் போன்றவை கலந்த மருந்துகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன.

இதனை நீங்கள் தக்க மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சாப்பிட வேண்டும்.  கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் எல்லாம் கொலஸ்டராலின் அளவை குறைத்துவிட முடியாது, சில சமயம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கைகொடுத்தாலும் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அதனால் முறையான உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது போன்றவற்றை செய்வது தான் ஆரோக்கியமான வழி.

மேலும் படிக்க | 50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News