கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் நீரிழிவு நோய்! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை & டிப்ஸ்!

Gestational Diabetes Remedies: தாயின் சர்க்கரை நோய், கருவில் உள்ள கருவுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2024, 10:23 AM IST
  • கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுத்தும் சிக்கல்கள்
  • கர்ப்பிணிகளின் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது எப்படி?
  • தாயின் சர்க்கரை நோய், கருவில் உள்ள கருவுக்கு ஏற்படுத்தும் பிரச்சனைகள்
கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் நீரிழிவு நோய்! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை & டிப்ஸ்!

கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.  அவற்றில் ஒன்று கர்ப்ப கால நீரிழிவு நோய். இந்த நோய். பல கர்ப்பிணிகளுக்கு பிரச்சனையாக மாறுகிறது. பொதுவாகவே கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், ஒரு கர்ப்பிணி உண்ணும் உணவு தான், அந்த குழந்தைக்கும் ஊட்டச்சத்தை கொடுக்கிறது.

Add Zee News as a Preferred Source

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சையும் கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்காலத்தில் சர்க்கரை நோய் என்பது அதிகம் கேள்விப்படும் விஷயமாக மாறிவிட்டது. அதிலும், கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் வந்தால் அது சிக்கலாக மாறுகிறது. வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள், எதை சாப்பிட்டாலும் குடித்தாலும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருப்பவையாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 
 
கர்ப்பகால நீரிழிவு நோய் 
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்தால், கர்ப்பிணிகள் எந்த வகையான உணவுகளை உண்ணலாம் எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. சர்க்கரை அளவு அதிகரிப்பது அல்லது குறைவதை கர்ப்பகால நீரிழிவு என்று அழைக்கிறோம்.

மேலும் படிக்க - ஓட்டப்பயிற்சி Vs நடைப்பயிற்சி: உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவுவது எது?

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு நோய்க்குக் காரணம் ஹார்மோன் சமநிலையின்மை, உடல் பருமன் உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

கர்ப்ப கால நீரிழிவு என்பது பிரசவத்தின்போது அபாயத்தை அதிகரிக்கும், அதிலும் குறிப்பாக அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றால் ஆபத்துகள் அதிகமாகும். அதோடுகூட, குழந்தைக்கு சர்க்கரை அளவில் மாறுபாடு மற்றும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.

எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கர்ப்பிணிகள் தங்கள் உணவு பழக்கத்தில் பலவிதமான மாற்றங்களை செய்ய வேண்டும். அதில், சில உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்றால் சில உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

கர்ப்பகால நீரிழிவு டயட்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். அதேபோல, கர்ப்பிணிகள் தங்கள் உணவில் பருப்பு வகைகள் பழங்கள் காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல, காய்களில் பாகற்காய் சுரைக்காய் கீரை மற்றும் நீர் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பழ வகைகளில் ஆப்பிள் பேரிக்காய் ஆரஞ்சு எலுமிச்சை என ஊட்டச்சத்து மிகுந்த பழங்களையும், பருவகால பழங்களையும் உண்ணலாம்.

மேலும் படிக்க | அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க மஞ்சள் ஒன்று போதும்

கர்ப்பிணிகளுக்கு புரதம் அதிகமுள்ள உணவுகள் அவசியமானவை. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க, மீன் டோஃபு, கோழி, முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற உணவுகள், உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையு  கட்டுப்படுத்துகின்றன.

கொழுப்புச் சத்துக்கள்
கரு வளர்ச்சிக்கு உதவும் விட்டமின் ஈ போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் தாய் மற்றும் சேய்க்கு நன்மை பயக்கக்கூடியவை. இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் கொழுப்புகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. கொழுப்பு உணவை மிகவும் அதிகமாக எடுத்துக் கொள்வது வேறு விதமான பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதால் அளவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

கால்சியம் சத்து
பால், பன்னீர், தயிர் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட பால் சேர்த்த பொருட்களை கர்ப்பிணிகள் உண்ணலாம். ஆனால் அந்தப் பால் குறைந்த கொழுப்பு கொண்டதாக இருப்பது நல்லது. எலும்புகள் வலுவாக இருக்கவும், குழந்தையின் வளர்ச்சிக்கும் பால் அவசியம்.
காய்கறிகளில் மாவுச்சத்து கொண்ட ப்ரோக்கோலி, குடைமிளகாய், கீரை, காலிபிளவர் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம், இவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கர்ப்பிணிகள் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். அவற்றில், குளிர்பானங்கள் மற்றும் சோடா ஆகியவை முக்கியமானவை என்றால், இனிப்புகளும் துரித உணவுகளும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என்பதால், அவற்றையும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க | காலையில கடனை கழிக்கலையா? வெறும் வயித்தில இதை குடிச்சா பிரச்சனை தீர்ந்திடும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News