ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிடும்!

இனி கொரோனா ஜலதோஷத்திற்கான காரணம் மட்டுமே! வீரியத்தை குறைக்குமா கொரோனா!! ஏப்ரலுக்குள் கோவிட் முடிந்துவிடுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2021, 09:32 AM IST
  • இனி கொரோனா ஜலதோஷத்திற்கான காரணம் மட்டுமே!
  • வீரியத்தை குறைக்குமா கொரோனா!
  • ஏப்ரலுக்குள் கோவிட் முடிந்துவிடுமா?
ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிடும்!  title=

புதுதில்லி: ஓமிக்ரானின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அனைவருக்கும் ஆசுவாசம் வழங்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது, 2022ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிடும் என்று கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான பேராசிரியர் பால் ஹண்டர் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு (Omicron Effect) குறித்து உலகம் முழுவதும் மக்களின் கவலைகளுக்கு மத்தியில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கிவிடும் என்ற செய்தி அனைவருக்கும் விருப்பமான செய்தியாக இருக்கிறது. 

ஏப்ரல் மாதத்திற்குள் கோவிட்-19 பலவீனமடைந்து, அதுவொரு 'ஜலதோஷத்திற்கு மேலும் ஒரு காரணமாக' மாறொவிடிம் என்று பேராசிரியர் பால் ஹண்டர் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

ALSO READ | நீரிழிவு நோயாளிகள் Omicron தாக்கத்திலிருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ளலாம்

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான பேராசிரியர் பால் ஹண்டர், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். இந்த செய்தி அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியாகவே இருக்கிறது என்று சொன்னால், அது மிகையல்ல.

எதிர்காலத்தில் கரோனாவின் தாக்கம் முடிவுக்கு வரும் என்று சொன்ன பேராசிரியர், கொரோனா ஒரு சாதாரண வைரஸ் (Corona Virus) மற்றும் நோயாக மாறிவிடும்; புத்தாண்டில் கொரோனாவின் தாக்கம் இருக்காது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கோவிட்-19 ஜலதோஷம் மற்றும் சளியின் பாதிப்புக்கான காரணமாக மட்டுமே தங்கிவிடும்
 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாக NHS ஊழியர்களின் பற்றாக்குறையைப் பற்றி பேசிய பேராசிரியர் பால் ஹண்டர், இந்த சிக்கல்கள் அனைத்துமே ஏப்ரல் 2022 க்கு மாறிவிடும். கோவிட்-19 என்பது, ஜலதோஷம் மற்றும் சளி போன்ற சாதாரண பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸாக வீரியம் குறைந்துவிடும் என்று கூறினார்.

குறைவான ஆபத்து
'கொரோனா என்பது என்றுமே முடிந்துப்போகாது. இதுவொரு தீராத வைரஸ். நோய்த்தொற்று நீங்காது, இருப்பினும் தீவிர நோயாக நீண்ட காலம் நிலைக்காது' என்று பால் ஹண்டர் கூறினார். கொரோனாவின் புதிய மாறுபாடு ஒமிக்ரான் (Omicron) பற்றி கருத்து தெரிவிக்கும் பால், இந்த புதிய மாறுபாடு டெல்டாவை விட மிகவும் விரைவாக பரவும், ஆனால் தாக்கம் குறைவானது என்று கூறினார்.  

கொரோனாவின் வீரியம் குறையும் என்ற செய்தி அனைவரின் காதிலும் தேன் வந்து பாய்வது போல இனிப்பான செய்தியாக இருக்கிறது.

ALSO READ | கொரோனா தடுப்பூசியிலிருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறிய வாலிபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News