Corona Virus கண்களில் உள்ள Cornea-வை பாதிக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது!!

சிம்ப்ளக்ஸ் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பிற வைரஸ்கள் கார்னியாவைப் பாதிக்கின்றன, ஆனால், கொரோனா வைரசால் பாதிப்பை இங்கே ஏற்படுத்த முடியவில்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 5, 2020, 04:51 PM IST
  • கண்ணில் உள்ள கார்னியா, கொரோனா வைரஸ் (SARS-Cov-2) நோய்த்தொற்றை எதிர்க்கிறது.
  • வைரஸ் வளர உதவும் கார்னியா மக்களின் சில பிரிவினர்களிடையே இருக்கலாம்.
  • ஆய்வில் பரிசோதித்த நபர்களில் எந்த கார்னியாவும் SARS-CoV-2 வளர உதவவில்லை.
Corona Virus கண்களில் உள்ள Cornea-வை பாதிக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது!! title=

மும்பை: வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வில், கண்ணில் உள்ள கார்னியா, கொரோனா வைரஸ் (SARS-CoV-2) நோய்த்தொற்றை எதிர்க்கிறது என்று தெரிய வந்துள்ளது. சிம்ப்ளக்ஸ் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பிற வைரஸ்கள் கார்னியாவைப் பாதிக்கின்றன, ஆனால், கொரோனா வைரசால் பாதிப்பை இங்கே ஏற்படுத்த முடியவில்லை.

செல் ரிப்போர்ட் இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளின்படி, கார்னியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற திசுக்கள் பாதிக்கப்படுகின்றனவா என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அறிக்கையின் ஆசிரியர் ஜொனாதன் ஜே மைனர், 'எங்கள் கண்டுபிடிப்புகள் அனைவரது கார்னியாக்களும் வைரசை எதிர்க்கின்றன என்பதை நிரூபிக்கவில்லை. ஆனால் நாங்கள் பரிசோதித்த ஒவ்வொரு வாலண்டியரின் கார்னியாவும் கொரோனா வைரஸை (Corona Virus) எதிர்க்கின்றன.

வைரஸ் வளர உதவும் கார்னியா மக்களின் சில பிரிவினர்களிடையே இருக்கலாம் என்பது இன்னும் சாத்தியம்தான். ஆனால் நாங்கள் செய்த ஆய்வில், பரிசோதித்த நபர்களில் எந்த கார்னியாவும் SARS-CoV-2 வளர உதவவில்லை’ என்று கூறினார்.

ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு

சில நோயாளிகளின் கண்களில் அறிகுறிகள் தெரியும்

கண்கள் மற்றும் கண் பார்வை துறையின் பேராசிரியர் ராஜேந்திர ஆப்டே, “சில COVID-19 நோயாளிகளிடம் கண்களில் அறிகுறிகள் காணப்படுகின்றன. கண்கள் சிவப்பாக இருப்பது இதில் ஒரு அறிகுறியாகும். ஆனால் வைரஸ் தொற்றுதான் இதற்கு காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கு வேறு பிற காரணங்களும் இருக்கலாம்.”

“கார்னியா மற்றும் கான்ஜுன்டிவா ஆகியவை கொரோனா வைரஸின் ஏற்பிகளாக அறியப்படுகின்றன, ஆனால் எங்கள் ஆய்வில், வைரஸ் கார்னியாவில் பிரதிபலிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தோம்.” என்று கூறினார்.

ஆய்வு ஆரம்ப கட்டத்தில் உள்ளது

ஆராய்ச்சியாளர்கள் கார்னியல் திசுக்களில் உள்ள முக்கிய பொருட்களையும் கண்டுபிடித்தனர். அவை வைரஸின் வளர்ச்சியைத் தூண்டலாம் அல்லது தடுக்கலாம். முடிவில், ஆசிரியர்கள், 'எங்கள் ஆய்வு இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. கண் உட்பட SARS-CoV-2 பரிமாற்றத்தின் அனைத்து வழிகளையும் நன்கு புரிந்துகொள்ள எங்களுக்கு கூடுதல் மருத்துவ ஆய்வுகள் தேவை.’ என்று கூறியுள்ளனர்.

ALSO READ: Alert: Corona Virus உடலை விட்டு சென்றாலும், அதன் பக்க விளைவுகள் நமக்கு ஆபத்தாக இருக்கலாம்…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News