இனிப்பு சுவை நிறைந்த மாவு பொருட்களால் செய்யப்பட்ட பண்டங்களை காலை நேரத்தில் சாப்பிடுவது சரியானதல்ல. அவை பார்ப்பதற்கும், உண்பதற்கும் ருசியானதாக தெரியலாம் ஆனால் அதில் நிறைந்துள்ள சர்க்கரை உடலுக்கு கேடு விளைவிக்கும். இதனை சாப்பிடுவதால் இதய நோய், நீரிழிவு, வயதான தோற்றம், முகப்பருக்கள் போன்ற பல பிரச்சனைகள் தோன்றும். இதற்கு பதிலாக புரோட்டீன் நிறைந்த உணவுகள் அல்லது பலன்களை உண்ணலாம்.
மேலும் படிக்க | Health Tips: இந்த மேஜிக் கலவை 3 பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்
காலை நேரத்தில் பருகும் காஃபியில் கூடுதலான க்ரீம்கள் அல்லது இனிப்புகளை சேர்ப்பது, செயற்கையான சுவையூட்டிகளை சேர்ப்பது போன்றவை உங்கள் வயிற்று பகுதியில் தங்கிக்கொள்கிறது. காலை உணவின்போது அதிகமான இனிப்பை சாப்பிடுவது அந்த நாள் முழுக்க இனிப்பு சாப்பிடும் ஆவலை தூண்டுகிறது. இதனால் நமது உடலின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு கலோரிகளை எரிக்க முடியாமல் போய் தொப்பை ஏற்படுகிறது. இதற்கு பதிலாக பிளாக் காஃபிகளை பருகலாம்.
ஓட்ஸ் காலை உணவிற்கு சிறந்ததாக கருதப்படுகிறது, இது நமது உடலுக்கு ஆற்றலை தருகிறது. இதிலுள்ள ப்ரோட்டீன், நார்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் வயிற்று பகுதியிலுள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. நார்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்கிறது, அதனால் கூடுதலாக தின்பண்டங்கள் சாப்பிடும் எண்ணம் வராது. இதனால் நமது எடையும் கட்டுக்குள் இருக்கும், தேவையற்ற கொழுப்புகளும் உடலில் தங்காது.
முழு தானியங்களில் நிறைந்துள்ள நார்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் வயிறு நிரம்பியது போன்ற நிறைவான உணர்வை ஏற்படுத்துகிறது. ஓட்ஸ், பிரவுன் ரைஸ், குயினோ, கோதுமை பிரெட்டுகள் போன்ற முழு தானிய உணவுகளை உண்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
குறைந்தது இரண்டு விதமான காய்கறிகளையாவது காலை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மையை அளிக்கும். காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், நார்சத்து அதிகமாகவும் இருக்கும், இது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை தருவதோடு, உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்குவதையும் குறைக்கிறது. முட்டைகளுடன் காய்கரைகளை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஊட்டமளிக்கிறது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை வேகமாக குறைக்க இந்த ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR