காலை உணவு மிகவும் முக்கியமானது. நாள் முழுவது புத்துணர்ச்சியுடன், ஆற்றலுடன் இருக்க காலை உணவு மிகவும் அவசியம் . காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், போது நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது. இது வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை பார்க்கலாம். உணவு வல்லுநர்கள் சில உணவுகளை காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என எச்சரிக்கின்றனர்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்
நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சீரான, சரியான அளவில் உண்ணுங்கள்.
மசாலா அதிகம் உள்ள உணவு
காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனுடன், நீங்கள் வயிறு மற்றும் மார்பில் நீங்கள் அசௌகரியத்தை உணரலாம்.
தேநீர் மற்றும் காபி
சிலர் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி சாப்பிடவே விரும்புகிறார்கள். பெரும்பாலானோருக்கு அதனை குடித்தால் தான் அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படலாம
குளிர்ந்த நீர்
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது. இதன் காரணமாக உங்கள் செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.
ஆல்கஹால்
ஆல்கஹால் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. இது உங்கள் கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ