முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. புரதத்துடன் இயற்கையான கொழுப்பும் இதில் உள்ளது. முட்டை உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமான உணவு என்றால் மிகையில்லை. வேகவைத்த முட்டை பலரது விருப்பமான உணவாக உள்ளது. முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். முட்டை சாப்பிட்ட உடன் சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
வாழைப்பழம்
முட்டையை சாப்பிட்ட உடனே வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை இரண்டும் நமது வயிற்றின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மீன்
முட்டை மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடுவது அல்லது ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிடுவது தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும். இது புரத ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
பன்னீர்
பலர் பன்னீரையும் முட்டையையும் கலந்து அல்லது ஸ்பெஷல் ரெசிபி செய்து சாப்பிடுகிறார்கள். பனீர் மற்றும் முட்டை இரண்டும் ஆரோக்கியமான கலவை அல்ல. இவை அனைத்தும் சேர்ந்து செரிமான அமைப்பை சேதப்படுத்தும். இது பலருக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!
எலுமிச்சை
முட்டை சமைக்கும் போது பலர் எலுமிச்சை சாற்றை சேர்க்கிறார்கள். முட்டை உள்ள கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டு சேரும் போது ஏற்படும் எதிர்வினை உடல நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
முட்டையில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் நமது உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. ஒரு நாளைக்கு 2 முட்டைகளை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை விட அதிகமாக உட்கொள்ள விரும்பினால், மருத்துவரை அணுகவும். அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ