இலவங்கப்பட்டை நீர்: PCOS முதல் எடை இழப்பு வரை.. அட்டகாசமான வீட்டு வைத்தியம்

Health Tips:இலவங்கப்பட்டையை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதில் பிரபலமான ஒன்று அதன் தண்ணீரை உட்கொள்வதாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2023, 06:16 PM IST
  • ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது.
  • புற்றுநோய் தடுப்பு .
  • சளி மற்றும் காய்ச்சலுக்கான தீர்வு.
இலவங்கப்பட்டை நீர்: PCOS முதல் எடை இழப்பு வரை.. அட்டகாசமான வீட்டு வைத்தியம்

Health Tips: இலவங்கப்பட்டை உணவின் சுவையையும் நறுமணத்தையும் அதிகப்படுத்தும் ஒரு மசாலா ஆகும். இது மரங்களின் உட்புற பட்டைகளிலிருந்து பெறப்படுகிறது. அதன் தனித்துவமான சுவை மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக இது பல நூற்றாண்டுகளாக ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுகின்றது. இலவங்கப்பட்டையை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதில் பிரபலமான ஒன்று அதன் தண்ணீரில் உட்கொள்வதாகும். இலவங்கப்பட்டை நீர், அதன் சூடான மற்றும் இனிமையான சாரத்துடன், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கின்றது. 

Add Zee News as a Preferred Source

இலவங்கப்பட்டை நீரின் நன்மைகள் (Health Benefits of Cinnamon Water)

இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது:

இலவங்கப்பட்டை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடவும் உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது:

இலவங்கப்பட்டை நீரில் புரோந்தோசயனிடின்கள், பாலிபினால்கள், ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றன.

எடை இழப்பை ஊக்குவிக்கிறது:

இலவங்கப்பட்டை தண்ணீரை நச்சுநீக்கும், அதாவது டீடாக்ஸ் பானமாக அல்லது மூலிகை தேநீர் வடிவில் குடிப்பது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கூடுதல் கிலோவை குறைக்க (Home Remedy For Weight Loss) உதவுகிறது.

நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும்: 

இலவங்கப்பட்டை நீரில் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த (Home Remedy For Diabetes) உதவும் பண்புகள் உள்ளன. அதாவது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான அளவு இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடித்தால், அது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

தலைவலியில் நன்மை 

தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இதற்கு இலவங்கப்பட்டை இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, இந்த பேஸ்ட்டை தலையில் தடவினால் தலைவலியில் (Home Remedy For Headache) இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சுகர் லெவலை குறைக்க சூப்பரான வழி... இந்த காய்களை சாப்பிடுங்க போதும்

ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது:

இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், இரத்தத்தை சுத்தப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

புற்றுநோய் தடுப்பு 

இலவங்கப்பட்டை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தினமும் இலவங்கப்பட்டையை உட்கொள்வது புற்றுநோயில், குறிப்பாக வயிற்று புற்றுநோயில் நன்மை பயக்கும்.

சளி மற்றும் காய்ச்சலுக்கான தீர்வு:

இலவங்கப்பட்டை நீர் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாகும். இதில் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன.

பிசிஓஎஸ்-ன் விளைவுகளைக் குறைப்பதில் உதவி:

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இதன் காரணமாக கருப்பைகள் வெளிப்புற விளிம்புகளில் சிறிய நீர்க்கட்டிகளுடன் பெரிதாகின்றன. இலவங்கப்பட்டை கலந்த தண்ணீருடன் சிறிது தேனும் சேர்த்து குடித்தால் PCOS-ன் விளைவுகளை குறைக்க (Home Remedy For PCOS) முடியும். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு இலவங்கப்பட்டை நீர் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முந்திரி பருப்பு இதயத்துக்கு நல்லது... கட்டுக்கதைகளை நம்பாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News