Myths about Cashews Nuts: உலர் பழங்கள் என்று சொன்னவுடனேயே முந்திரி பருப்பு என்ற பெயர் மக்களின் மனதில் தோன்றாமல் இருக்க முடியாது. மிகவும் சுவையான உலர் பழங்களில் ஒன்றான முந்திரி, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. முந்திரி சில நேரங்களில் இனிப்புகள் தயாரிப்பதிலும், சில சமயங்களில் காரமான சிற்றுண்டிகள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. முந்திரியில் செய்யப்பட்ட முந்திரி பர்ஃபியை யாருக்குத்தான் பிடிக்காது, அதே சமயம் வறுத்த முந்திரியையும் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் முந்திரி பருப்பு தொடர்பாக சமூகத்தில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் முந்திரி பருப்பை ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். சிலர் முந்திரி பருப்புகளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதுகின்றனர். உங்களுக்கும் முந்திரி பருப்புகளை சாப்பிடுவதில் விருப்பம் இருந்தால், இன்று நாம் முந்திரி தொடர்பான சில தவறான கருத்துகளையும் அவற்றின் உண்மையையும் தெரிந்து கொள்வோம். முந்திரி பருப்பு தொடர்பான சில கட்டுக்கதைகளை உடைக்கப் போகிறோம்.
முந்திரி எடையை அதிகரிக்குமா? (Does cashew increases body weight )
முந்திரி பருப்பை சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்ற தவறான கருத்து சாமானியர்களிடையே உள்ளது. அது முற்றிலும் தவறானது. முந்திரி நமது எடையை அதிகரிக்காமல், எடையைக் கட்டுப்படுத்துகிறது. முந்திரியில் அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளது, இது நம் உடலுக்கு மிகவும் நல்லது. முந்திரி பருப்பை உட்கொள்வதால், நீண்ட நேரம் பசி எடுப்பதில்லை. அதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கிறோம். உடல் எடையை கட்டுப்படுத்த, 4-5 முந்திரியை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
முந்திரி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா? (Does cashews increase cholesterol?)
முந்திரி நமது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது என்ற கருத்தைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் முந்திரியை தாவரங்களிலிருந்து பெறுவதால், எந்த தாவர அடிப்படையிலான பொருட்களிலும் கொலஸ்ட்ரால் இல்லை. விலங்கு சார்ந்த பொருட்களில் மட்டுமே கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. முந்திரி பருப்பில் காணப்படும் பைட்டோஸ்டெரால் அதன் கூட்டு அமைப்பு காரணமாக கொலஸ்ட்ராலைப் போலவே தோன்றுகிறது. எனினும் முந்திரியை அதிகமாக உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே, முந்திரி பருப்பை சிறிய அளவில் பயன்படுத்துவது நல்லது.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க தினமும் இந்த ‘ட்ரிங்க்’ குடித்தால் போதும்
முந்திரி இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா? (Do cashews increase blood sugar?)
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் முந்திரி பருப்புகளை சாப்பிடுவதா வேண்டாமா என குழப்பமடைகிறார்கள். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, முந்திரி பருப்புகளை சாப்பிடுவது பாதுகாப்பானது மட்டுமல்ல, நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முந்திரியில் மிகக் குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முந்திரி பருப்பை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முந்திரி பருப்பை தொடர்ந்து சாப்பிடுவது நமது இரத்த குளுக்கோஸின் அளவைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்கும்.
குறிப்பு: இருப்பினும், ஒவ்வொரு நபரின் உடலும் தனிப்பட்டது, மற்றவர்களில் இருந்து வேறுபட்டது, இதன் காரணமாக ஒவ்வொருவரின் உடலிலும் ஏற்படும் குறிப்பிட்ட உணவின் தாக்கம் வித்தியாசமாக இருக்கும். உலர் பழங்கள் தொடர்பாக, உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏதும், இருந்தால், முந்திரி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும் பழங்களின் பட்டியல்! முதலிடத்தில் புளூபெர்ரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ