Health Tips: மனிதர்களை தினமும் பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. இவற்றின் தீர்வுக்காக பல வித மருந்துகளை உட்கொள்கிறார்கள். ஆனால், இவற்றால் பல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலான நோய்களுக்கு நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களே மருந்துகளாக பயன்படும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நாம் பயன்படுத்தும் மசாலாக்கள் நமது உணவின் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் நம்மை பல வித நோய்களிலிருந்தும் காக்கின்றன.
கிராம்பு தேநீரின் நன்மைகள் (Benefits of Clove Tea):
பலர் நோய்வாய்ப்படும்போது அல்லது தொண்டை புண் இருக்கும்போது கிராம்பு டீயைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். இது நமக்கு நிவாரணம் அளிக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறப்படுகிறது. கிராம்பு பல நோய்களுக்கு ஏற்ற வீட்டு வைத்தியமாக (Home Remedy) செயல்படுகின்றது. கிராம்பு தொண்டை வலிக்கு நன்மை பயக்கும். இதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இது அனைவரது வீடுகளிலும் காணப்படுகின்றது. கிராம்புகளின் நன்மைகள் பல உள்ளன. அவற்றால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இருப்பினும், கிராம்பை எந்த நேரத்தில், எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். கிராம்பு தேநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளின் நீண்ட பட்டியல் உள்ளது.
கிராம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது. பொதுவாக ஜலதோஷம் முதல் சளி வரை பல சிக்கல்களில் கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. செரிமானம், வாயு, மலச்சிக்கல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம்பு மிகவும் நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீரில் சில துளி கிராம்பு எண்ணெயைக் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். தினமும் ஒரு கப் கிராம்பு நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
கிராம்பு தேநீரின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திற்கு நிவாரணம் அளிக்கும் கிராம்பு தேநீர்:
கிராம்பில் மனதை அமைதிப்படுத்தும் மற்றும் ஓய்வெடுக்க உதவும் பண்புகள் உள்ளன என்பது மிகச் சிலருக்குத் தெரியும். ஆகையால் மன அழுத்தம் (Mental Tension) உள்ளவர்களுக்கு கிராம்பு டீ நன்மை பயக்கும்.
2. செரிமான ஆரோக்கியத்திற்காகு கிராம்பு டீ:
கிராம்பு (Clove) டீ வயிற்றுப் புண்கள், அல்சர் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, வயிற்றுப் புறணியைப் பாதுகாக்கிறது. மேலும் இது செரிமான அமைப்பை வலுப்படுத்துகிறது.
மேலும் படிக்க | வெளுத்துக்கட்டும் வெந்தயம்.. பல பிரச்சனைகளின் ஒரே தீர்வு
3. எடை இழப்புக்கு கிராம்பு டீ:
கிராம்பில் இயற்கையான கொழுப்பு அமிலங்கள் மற்றும் சின்தசிஸ் பிளாக்கர்கள் நிறைந்துள்ளன. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க (Weight Loss) உதவுகிறது.
4. புற்றுநோய் எதிர்ப்பில் கிராம்பு தேநீர்:
கிராம்பு புற்றுநோய் செல்களைக் கொல்லும் என்று நம்பப்படுகிறது. கிராம்பில் யூஜெனோல் உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
5. கல்லீரலுக்கு கிராம்பு தேநீர்:
கிராம்பு உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் யூகலிப்டஸையும் கொண்டுள்ளது. இது உடல் பாகத்தின் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கல்லீரல் செல்கள் பரவுவதையும் தடுக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Low BP பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்களால் உடனடி பலன் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









