Low BP பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்களால் உடனடி பலன் கிடைக்கும்

Low BP Remedies: குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 3 சிறப்பு உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2023, 05:01 PM IST
  • குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உலர் திராட்சையை உட்கொள்ளலாம்.
  • இரவில் தூங்கும் முன் 4-5 உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • காலையில் எழுந்தவுடன், இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
Low BP பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்களால் உடனடி பலன் கிடைக்கும் title=

Low BP Remedies: தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், தற்போது மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத பல நோய்களும் அடங்கும். நீரிழிவு நோய், உடல் உப்பசம், இரத்த அழுத்தம் ஆகியவை இந்நாட்களில் உலகம் முழுவதும் மனிதர்களை மிக அதிகமாக தாக்கி வருகின்றன. இரத்த அழுத்தம் என்றால் பொதுவாக நாம் உயர் இரத்த அழுத்ததிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், குறைந்த இரத்த அழுத்தமும் மெல்ல மெல்ல அதிகமாக பரவி வருகின்றது. இதை கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

குறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன (What is Low Blood Pressure)

ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த அழுத்தம் பொதுவாக 120/80 mmHg ஆக இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த இரத்த அழுத்தம் 90/60 mmHg க்கும் குறைவாக இருந்தால், அது குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) என்று அழைக்கப்படுகிறது.

உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்

குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் ஒரு நபர் பொதுவாக தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளை உணர்கிறார். இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நோயாளி மாரடைப்பையும் சந்திக்க நேரிடும். குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 3 சிறப்பு உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை உட்கொள்வதன் மூலம் இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள்  (Low BP Control Tips)

திராட்சை (Raisin)

குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த (Low BP Control Tips) உலர் திராட்சையை உட்கொள்ளலாம். இதற்கு இரவில் தூங்கும் முன் 4-5 உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன், உங்கள் காலை கடன்களை முடித்த பின்னர், இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். வேண்டுமானால் அந்த தண்ணீரையும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இரத்த அழுத்தம் சாதாரண நிலையில் இருக்கும். 

மேலும் படிக்க | மடமடனு எடை குறைய, தொப்பை கரைய... இந்த எண்ணெயில் சமைத்தால் போதும்

அஸ்வகந்தா (Ashwagandha)

அஸ்வகந்தாவின் பயன்பாடு குறைந்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பல சத்துக்களும் பண்புகளும் இதில் உள்ளன. இதை உட்கொள்ள, ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு, அரை கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் இந்த பொடியை கலந்து சாப்பிடுங்கள். இந்த பொடியை தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

துளசி இலைகள் (Tulsi Leaves) 

குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு துளசி இலைகள் சர்வ ரோக நிவாரணி மருந்தாக செயல்படுகிறது. பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை துளசி இலைகளில் ஏராளமாக உள்ளன. பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் காணப்படுகின்றன. இது உடலில் இயல்பான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால், 4 துளசி இலைகளை சுத்தம் செய்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும் என உடல்நல நிபுணர்களின் கூறுகிறார்கள். இப்படி செய்வதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து ஆரோக்கியம் மேம்படும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்ட... வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ‘6’ பானங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News