இன்று மக்கள் பல வகையான உணவுகளை உண்கின்றார்கள். அவை அனைத்தும் ஆரோகியமானத்துதான் என்று கூற முடியாது. அதே போல் சில சமயங்களில் நம்மால் தவிர்க்க முடியாத சூழலில் உடலுக்கு நலனற்ற உணவனை உண்ண நெருக்கிறது. இப்படிபட்ட குழநிலையில் உடலில் தேவையற்ற பொருட்கள் தங்கி, உண்டளுக்கு தீங்கு விளைவிக்கத் தொடங்கி விடுகின்றது. குறிப்பாக உடலில் நச்சு சேர்ந்து விடுகின்றது. இதனை அப்படியே விட்டு விட்டால், விரைவாக பல வகை நோய்களின் தாக்கம் ஏற்பட்ட ஆரம்பிக்கும். எனினும், இதனை தவிர்க்க, நீங்கள் தினமும் நச்சை போக்கும், மற்றும் உடலை சுத்தம் செய்யும் டிடோக்ஸ் நீரை அருந்தலாம்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
டிடோக்ஸ் தண்ணீர் என்றால் என்ன
டிடோக்ஸ் நீர் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். சில டிடோக்ஸ் நீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நன்மைகளை தரு. அதேபோல் இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து ஆரோகியமான வாழ்க்கையை வாழ இது உதவும். குறிப்பாக முக அழகை அதிகரித்து, தலைமுடி உதிர்வையும் இது குறைக்கும். அதேபோல் இந்த டிடோக்ஸ் நீர் உடலுக்கு தேவையான சக்தியை இது பெற உதவும்
இதை செய்ய முழுவதுமாக இயற்கை பொருட்களே தேவை. இந்த டிடோக்ஸ வாட்டர் ஜீரண பிரச்சனையை போக்கி, குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
உங்கள் உடலில் நச்சு உள்ளதற்கான அறிகுறிகள் என்ன
உங்கள் உடலில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தால் மல சிக்கல், தலைவலி தொடர்ந்து அவ்வப்போது ஏற்படும், மயக்கம், வாயு பிரச்சனை, வயிற்று போக்கு, உடலில் வலி, குமட்டல், சரும பிரச்சனைகள், சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போகும், வாய் துற் நாற்றம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
டிடோக்ஸ் நீரை செய்வது எப்படி
உடலுக்கு தேவையற்ற பல நச்சுகள் தினமும் உடலில் சேர்ந்து கொண்டு இருக்கும். அவற்றை சேர விடாமல் தடுக்க நாம் பல விதமான முயர்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி இந்த டிடோக்ஸ் நீர், உடலில் தேவையற்ற நச்சுகளை தொடர்ந்து வெளி ஏற்றிக் கொண்டே இருக்க உதவும். பல வகை டிடோக்ஸ் நீரை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
எலுமிச்சை நீர்: ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளவும். சிறிது இஞ்சி துண்டை எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சைபழ சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை நன்கு இடித்து இந்த சாறுடன் சேர்த்து கலக்கவும். இதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து, தண்ணீர் அல்லது சுடு தண்ணீரில் கலந்து அருந்தவும்.
பெர்ரி: பெர்ரி பழத்தை தேவையான அளவு எடுத்து அதை மிக்ஸரில் நன்கு அரைத்து சாறு போல எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேன் சேர்க்கலாம், அல்லது அப்படியே தண்ணீர் சேர்த்து கலந்து அருந்தலாம்.
வெள்ளரிக்காய்: தேவையான அளவு வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளவும், அதை நன்கு சாறு போல அரைத்து கொள்ளவும். பின்னர் இந்த சாறை வடிகட்டி, இதனுடன் சிறிது எலுமிச்சைபழ சாறு சேர்த்து, உப்பு சிறிது சேர்த்து அருந்தவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR