கர்ப்ப காலத்தில் இறைச்சி சாப்பிடலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!

கர்ப்பகாலம் என்பது பெண்கள் தங்கள் உண்ணும் டயட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய காலம். தாய் சேய் ஆரோக்கியமாக இருக்கவும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, குறைபாடுகள் ஏதும் இல்லாத குழந்தையாக பிறக்கவும், தாய் தனது ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2024, 04:21 PM IST
  • பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்வது குறித்து பெண்கள் மனதில் குழப்பம் உள்ளது.
  • கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?
  • ஆரோக்கியமான குழந்தை பிறக்க, தாய் தனது ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இறைச்சி சாப்பிடலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!! title=

கர்ப்பகாலம் என்பது பெண்கள் தங்கள் உண்ணும் டயட்டில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய காலம். தாய் சேய் ஆரோக்கியமாக இருக்கவும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, குறைபாடுகள் ஏதும் இல்லாத குழந்தையாக பிறக்கவும், தாய் தனது ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், கர்ப்ப காலத்தில், அசைவம் சாப்பிடுவது உட்பட பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்வது குறித்து பெண்கள் மனதில் குழப்பம் உள்ளது. கர்ப்ப காலத்தில் இறைச்சி சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நிலை என்ன (Health Tips) என்பதை அறிந்து கொள்ளலாம். 

கர்ப்பிணிப் பெண்கள் ஒன்பது மாதங்களில் இறைச்சி சாப்பிடுவது நல்லதா என்பது பற்றி  அறிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் அசைவம் சாப்பிடலாமா?

யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் அசைவ உணவைத் தவிர்க்கவும், ஆன்மிகச் சிந்தனைகளைக் கொண்டிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் வெளியிட்ட இந்த புத்தகம் குறித்து மருத்துவ உலகில் பல விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் படிக்க | எகிறும் சுகர் லெவலுக்கு எமனாகும் நாவல் பழம்... பயன்படுத்தும் சரியான முறை..!!

ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், இது குறித்து மேலும் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்பது இயற்கை மருத்துவத்தின் பொதுவான கொள்கை" என்றார். இருப்பினும், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள், இந்த கருத்தை எதிர்க்கின்றனர், கர்ப்பிணிப் பெண்கள் அசைவம் சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள்.

மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் மஞ்சு கெமானி என்பவர் இது குறித்து கூறுகையில், அத்தகைய அறிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்களுக்குப் பின்னால் உறுதியான ஆதாரம் அல்லது காரணம் எதுவும் இல்லை என்று கூறுகிறார். அசைவ உணவில் புரதச்சத்து அதிகம். கர்ப்பிணிகள் முட்டை, மீன், சிக்கன்போன்றவற்றை உண்ணலாம்.

அதே சமயம், இந்த விஷயத்தில் எச்சரிக்கை தேவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கர்ப்ப காலத்தில் அசைவ உணவுகளை உண்ணலாம் என்றாலும், இறைச்சியை நன்றாக சமைக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றனர்

கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன?

கர்ப்ப காலத்தில் இறைச்சி சாப்பிடுவது தாய் மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கர்ப்ப காலத்தில் இறைச்சியை சீரான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். இறைச்சியில் பொட்டாசியம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் உடல் எடை கூடும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். எந்த உணவும் உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்றால், கர்ப்ப காலத்தில் கூட இறைச்சி சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மாறாக, ஒவ்வொரு நாளும் சிறிய அளவிலான இறைச்சியை சாப்பிடுவது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் மெலிந்த கொழுப்புகளை உங்கள் உடலுக்கு வழங்குகிறது.

அதிகமாக சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தல்

இருப்பினும், கர்ப்ப காலத்தில் அதிக அளவு அசைவ உணவை உட்கொள்வது தாய் மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க - சுகருக்கே டாடா காட்டும் மூலிகை மசாலா.. நீரிழிவு நோயாளிகளுக்கு நோ டென்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News