Home Remedies For Summer Cold: நாள் முழுவதும் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகிறீர்களா... அதுமட்டுமின்றி எழுந்ததில் இருந்து தொடர்ந்து தும்மல் வந்துகொண்டே இருக்கிறதா அப்படியென்றால் உங்களுக்கு கோடை காலத்து சளி பிடித்துவிட்டது என்ற அர்த்தம். பருவம் மாற்றத்தாலும், காற்றில் தூசிகள் அதிகமாக காணப்பட்டாலும் இதுபோன்ற கோடை காலத்திலும் ஒருவருக்கு சளி பிடிப்பது இயல்புதான்.
கோடை காலத்தில் சளி பிடிப்பது வழக்கம் தான் என்றாலும் அவை வேகமாக பரவக்கூடியதாகும். வெளிப்புறத்தில் காணப்படும் தூசிகள் உங்களுக்கு இதுபோன்ற உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். மூக்கடைப்பு மற்றும் மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னை வந்தால் பதற்றமடைய வேண்டாம். உடனடியாக மருத்துவர்களை சந்தித்து அதுகுறித்து சிகிச்சை பெற்றுக்கொண்டாலே அதனை சரிசெய்துவிடலாம்.
இதுதான் பெரிய பிரச்னை
இருப்பினும் சளி பிடிப்பது குறித்து மக்களிடையே தவறான புரிதல்களே நிலவுகின்றன. மழை காலத்திலும், பனி காலத்திலும் மட்டும்தான் தங்களுக்கு சளி பிடிக்கும் என நினைத்து வருகின்றனர். ஆனால் இது தவறான புரிதல் என்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில்,"மூக்கடைப்பு ஏற்படுவது அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படுவது என்பது தூசி உள்ளிட்ட மாசுப்பாடுகள் காரணமாகதான். மாசுபாடு அதிகமாவது உடல்நிலையை பாதிக்கும்" என்றனர்.
மேலும் படிக்க | முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!
கோடை காலத்தில் சளி பிடிப்பதற்கும், குளிர் காலத்தில் சளி பிடிப்பதற்கும் அந்தந்த பருவத்தின் வெப்பநிலை மட்டுமின்றி பல வித்தியாசங்கள் இருக்கும். குளிர்காலத்தை விட வெயில் காலத்தில் மாசுபாடு அதிகமாக காணப்படும் என்பதால் அது மூச்சுக்குழாயில் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். கோடை காலத்தில் காற்று மாசுபாடு என்பது இந்தியாவில் பெரிய பிரச்னை என்றும் கூறப்படுகிறது.
வீட்டு வைத்தியங்கள்
சுற்றுச்சூழலில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்றில் பரவும் வைரஸ்களும் பெருகும். இதனால் பலருக்கும் கோடையில் சளி பிடிக்கும். இதனை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் இதில் இருந்து தப்பிக்கலாம். கோடையில் உங்களுக்கும் சளி பிடித்து மூக்கடைப்பு ஏற்பட்டால் அதில் இருந்து குணமடைய இந்த வீட்டு வைத்தியங்களை செய்யுங்கள்
உடலுக்கு தேவை ஓய்வு
உடலுக்கு போதுமான ஓய்வளிக்க வேண்டும். அதற்காக நன்றாக தூங்க வேண்டும். தூக்கமே உடலுக்கு தேவையானது மற்றும் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உடற்பயிற்சி
ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் படுத்தே இருப்பதும் சரியாகாது. சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் உடல்நிலையை தேற்றும் எனலாம். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் குறிப்பாக மூக்கின் திசைகளில்... இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது தேவையான சத்தும், ஆக்ஸிஜனும் உடல் முழுவதும் செல்லும். இதனால் மூக்கடைப்பு பிரச்னை போய்விடும்.
உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்
காஃப்பின் நிறைந்த பானங்கள் மற்றும் மது குடிப்பதை தவிர்த்து அதிக தண்ணீரை குடியுங்கள். சூப் மற்றும் சுட சுட டீ குடிப்பது உங்களுக்கு சிறிய நிவாரணத்தை அளிக்கும்.
சத்தாக சாப்பிடுங்கள்
உடலுக்கு ஊட்டச்சத்துகளை அளிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். எனர்ஜி அளிக்கும் புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் உடல்நல பிரச்னை நீங்கி ஆரோக்கியமாக உணரலாம். காய்கறிகள், பழங்களை உங்களின் உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் வைட்டமிண், துத்தநாகம், இரும்புச்சத்து உள்ளிட்டவை உடல்நலனுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் வீட்டு மருத்துவம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | இந்த 6 விஷயங்களை செய்தால் இதயம் எப்போதும் இரும்பாக இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ