விடாத தலைவலி பாடாய் படுத்துகிறதா... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். ஆனால் தலைவலி தானே என எண்ண வேண்டாம். நம் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து விடும். அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2022, 08:35 PM IST
  • அடிக்கடி தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்கள்.
  • சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும்.
  • உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
விடாத தலைவலி பாடாய் படுத்துகிறதா... சில எளிய வீட்டு வைத்தியங்கள்! title=

சிலர் அடிக்கடி தலை வலியினால் அவதிப்படுவார்கள். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால், சிலர் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல்,  அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், நீர் சத்து பற்றாக்குறை போன்றவை.  அடிக்கடி தலைவலி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டால், அதற்கு எளிதில் தீர்வு காணலாம். தலைவலி வந்த உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், அதிக அளவில் வலி நிவாரணி எடுத்துக் கொள்வது, உடலுக்கு கேடானது.

அடிக்கடி தலைவலி வருவதற்கான முக்கிய காரணங்கள்:

ரத்த அழுத்தம்:

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும். 

இரத்த சோகை:

உங்கள் உடலில் இரத்தத்தில் சிவப்பணு குறைவாக இருந்தால், அதாவது ஹூமோகுளோபின் குறைவாக இருந்தால், காலையில் எழுந்தவுடன் தலையில் வலியை உணரலாம். அதே நேரத்தில், உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தாலும் தலைவலியுடன் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். எனவே அடிக்கடி காலை எழுந்த உடம் தலைவலி ஏற்பட்டால், ரத்த பிரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை அளவு:

உங்கள் உடலில் சர்க்கரை அசாதாரணமாக இருந்தால்,  காலை தலைவலி ஏற்படலாம். இது சர்க்கரை அளவு தாறுமாறாக இருப்பதற்கான  அறிகுறியாகும். எனவே, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலி இருந்தால், உங்கள் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்

நீரிழப்பு:

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வருவதற்கு தண்ணீர் பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்காததால், காலையில் எழுந்தவுடன் தலைவலி வரலாம் என்று சொல்லலாம்.

தூக்கமின்மை:

தூக்கமின்மை காரணமாக காலையில் தலைவலியை உணரலாம். அதே சமயம், பலருக்கு மன அழுத்தம் காரணமாகவும், தலைவலி பிரச்சனை உள்ளது. இரவு ஷிப்டில் அதிகம் பணிபுரிபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலியை உணரலாம்.

தலைவலி  ஏற்படும் போது செய்ய வேண்டியவை:

சில மூலிகைகள் வலி நிவாரணத்துக்கு பயன்படுகிறது. இஞ்சி  தலைவலியில் நிவாரணம் அளிக்க உதவுகிறது. அதே போன்று புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்து கொண்டால் தலைவலிக்கு சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இறுக்கமான தசைகளை தளர்த்தில், தலைவலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.

மேலும், சுக்கு பொடியை நீர் விட்டு குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகிவிடும். மேலும், உடலில் தேவையான அளவு நீரில்லாத போது சூடேறி தலைவலி உண்டாகலாம். அதனால்,  தண்ணீரை குடிப்பதாலும் தலைவலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். குளிர்ந்த நீரில் பருகுவதை தவிர்க்கவும். சாதாரண நீரிலும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

 (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Alert! 'இவற்றை' சாப்பிட்ட பிறகு பால் அருந்தக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News