குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்!

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவை கொடுத்தால் தான் அவர்கள் அன்றைய நாள் முழுதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.  

Written by - RK Spark | Last Updated : Feb 14, 2023, 05:55 AM IST
  • குழந்தைகளின் அன்றைய தினத்தை தொடங்க ஓவர்நைட் ஓட்ஸ் சிறந்ததாக கருதப்படுகிறது.
  • குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஆரஞ்சு, பெர்ரி, மாதுளை போன்ற பழங்களை கொடுக்கலாம்.
  • காலை நேரத்தில் காய்கறிகள் கலந்த உப்மா சாப்பிடுவது வயிறு நிறைவான உணர்வை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்!  title=

பொதுவாக நாம் காலையில் எந்த அளவு ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறோமோ அந்த உணவு தான் அன்றைய நாளுக்கான ஊட்டச்சத்தினை நமக்கு வழங்குகின்றது.  அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு காலை நேரத்தில் ஆரோக்கியமான உணவை கொடுக்க வேண்டியது அவசியம்.  ஊட்டச்சத்தான உணவை கொடுத்தால் தான் அவர்கள் அன்றைய நாள் முழுதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் சுற்றி திரிவார்கள்.  காலி நேரத்தில் சுவையான உணவை கொடுப்பது மட்டுமின்றி சுவையுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவை கொடுப்பது தான் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய மிக நல்ல விஷயம்.  இப்போது காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவு வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். 
 
1) ஓட்ஸ்: 

உங்கள் குழந்தைகளின் அன்றைய தினத்தை தொடங்க ஓவர்நைட் ஓட்ஸ் சிறந்த மற்றும் ஆரோக்கியமான  உணவாக கருதப்படுகிறது.  ஓட்ஸை தயார் செய்து ஒரு நாள் முன்னதாக இரவில் வைக்க வேண்டும்.  இதனை மறுநாள் காலையில் எடுத்து காலை உணவின் போது வாழைப்பழங்கள், செர்ரிகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான பழங்களை சேர்த்து கலந்து கொடுக்கலாம்.  இதில் கூடுதல் சுவையை சேர்க்க விரும்பினால் சிறிது கோகோ பவுடர், தேனுடன் பாதாம் மற்றும் பிஸ்தாவைச் சேர்த்துக் கொள்ளலாம்.  மேலும் ஓட்ஸை கொண்டு தோசை, இட்லி அல்லது உப்மா போன்ற ஏதேனும் ஒரு உணவு வகையை தயார் செய்யலாம்.

மேலும் படிக்க | எச்சரிக்கை!அளவிற்கு அதிகமான பப்பாளி உணவுக் குழாயை சுருக்கி விடும்!

2) முட்டை: 

முட்டைகள் காலை நேரத்திற்கு ஏற்ற சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது.  முட்டையில் உயர்தர புரதம் மற்றும் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.  முட்டையில் காணப்படும் புரோட்டீன்கள் குழந்தைகளின் தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது. பொறியல், ஆம்லெட், வேகவைத்த, முட்டை ராப் மற்றும் முட்டை சாண்ட்விச்கள் போன்ற பல்வேறு வழிகளில் குழந்தைகளுக்கு நீங்கள் முட்டைகளை காலை உணவாக கொடுக்கலாம்.

3) கீரைகள்: 

பொதுவாக கீரைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.  உங்கள் குழந்தைகள் விரும்பும் கீரை, முட்டைக்கோஸ் அல்லது குடைமிளகாய் போன்ற சில பச்சை காய்கறிகளை வதக்கி, அதை தோசையுடன் சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாக அவர்களுக்கு கொடுக்கலாம்.  இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் காய்கறிகளை நீங்கள் அதிக நேரம் சமைக்கக்கூடாது, ஏனெனில் அதிக வெப்பம் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை நீக்கிவிடக்கூடும்.

4) பழங்கள்:

குளிர்காலம் வந்துவிட்டதால் குழந்தைகள் குறைவான பழங்களையே சாப்பிடுகிறார்கள், இது வைட்டமின் குறைபாடு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.  குறிப்பாக குளிர்காலத்திலும் குழந்தைகளுக்கு பழங்களை கொடுக்க வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.  குளிர்காலத்தில் வளரும் புதிய பழங்கள் சிறந்த ஊட்டச்சத்து உள்ளடக்கம் கொண்டிருப்பதோடு அவை இயற்கையாகவே கூடுதல் சுவையை கொண்டிருக்கும்.  ஆரஞ்சு, பெர்ரி, நெல்லிக்காய் மற்றும் மாதுளை குளிர்காலத்தில் சாப்பிட சிறந்தது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து கொண்ட இந்த உணவுப்பொருட்கள் குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகளை மேம்படுத்துகிறது.

5) உப்மா: 

காலை நேரத்தில் உப்மா சாப்பிடுவது நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தும் மற்றும் இந்த உணவை தயார் செய்வது காலை நேரத்தில் பெண்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கும். உப்மாவில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  சிறுநீரகங்கள், இதயம், எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் நிலையை பராமரிக்கவும் மேம்படுத்தவும் உப்மாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன.  பட்டாணி, கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற எளிய காய்கறிகளையும் உப்புமாவில் சேர்ப்பதன் மூலம் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் ‘இன்சுலின்’ செடி! பயன்படுத்தும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News