இதயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தும் கால்கள் & பாதங்கள்! மாரடைப்பை காட்டும் அறிகுறிகள்

Symptoms of Heart Attack: கால்களில் காணப்படும் இந்த 5 அறிகுறிகள் மாரடைப்புக்கான நேரடி அறிகுறியாகும், இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் கொஞ்சம் கூட தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் செல்லுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2023, 06:14 AM IST
  • மாரடைப்புக்கான நேரடி அலர்ட் கொடுக்கும் இதயத்தின் சிக்னல்
  • கால்களில் 5 அறிகுறிகள்
  • இதயத்தை பிரதிபலிக்கும் கால் & பாதங்கள்
இதயத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தும் கால்கள் & பாதங்கள்! மாரடைப்பை காட்டும் அறிகுறிகள் title=

இதயத்தை பிரதிபலிக்கும் கால் & பாதங்கள்: மாரடைப்பு தொடர்பான சில அறிகுறிகள் உள்ளன, அவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது, கால்களில் மட்டுமல்ல, கால் பாதங்களிலும் அறிகுறிகளைக் காட்டும். உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுவது என்பது ஒரே நாளில் ஏற்படுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே ஏற்படும் மாற்றம் உச்சகட்டத்தை அடையும்போது தான் நமக்கு உடலில் வலி அல்லது பிரச்சனை வெளியில் தெரிகிறது. ஆனால், உடல் பிரச்சனையின் உச்சகட்டத்திற்கு போவதற்கு முன்னதாகவே அதை பலவிதமாக வெளிப்படுத்துகிறது.

அதிலும் இதயம் என்பது நம் உடலின் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று. இது நாம் உறங்கும்போதும், உறங்காமல் வேலை செய்யும் உடற்பாகம். உடலின் இந்த முக்கியமான பாகத்தில் பிரச்சனை ஏற்படும்போது, அது தொடர்பான அறிகுறிகள் முன்னரே வெளியில் தெரிகிறது. ஆனால் அவற்றைப் பற்றி நமக்கு தெரிவதில்லை. 

மோசமான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, மாரடைப்பு போன்ற ஆபத்தான சுகாதார நிலைமைகளின் ஆபத்து அதிகரித்து வருகிறது. அதன் ஆபத்தை குறைக்க, சரியான உணவு மற்றும் சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மட்டும் முக்கியம், மாரடைப்புக்கு முன் உடலில் அடிக்கடி காணப்படும் அறிகுறிகளைக் கண்காணிப்பதும் முக்கியம். இந்த அறிகுறிகளை அனைவரும் கண்காணித்து வந்தால், இதயம் தொடர்பான பல பிரச்சனைகளை, ஆரம்பத்திலேயே சீர் செய்துவிடலாம். 

மேலும் படிக்க | கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு! கேரட்டை விரும்பும் ஆரோக்கியம்! ஊட்டச்சத்து மிகுந்த கருப்பு கேரட்

ஏனென்றால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் மார்பு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமல்ல, உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம், அதில் உங்கள் கால்களும் அடங்கும். மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் பாதங்கள் மற்றும்  அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் தெரியும். அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பாதங்களில் நிற மாற்றம்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், சில நேரங்களில் இதயம் சரியாகச் செயல்பட முடிவதில்லை, இதன் காரணமாக, போதுமான அளவு இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் இல்லாததால், உடலின் தோல் நீல நிறமாக மாறத் தொடங்குகிறது, இது மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் இதயம் தொடர்பான பல நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

கால்களில் வீக்கம்
இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது உங்கள் உடலில் இரத்தத்தை திறம்பட செலுத்துவதை நிறுத்துகிறது. இதன் காரணமாக, இதயத்தின் பம்ப் செய்யும் திறன் பலவீனமடைவதால், கால்களில் இருக்கும் ரத்தம் மீண்டும் இதயத்திற்கு செல்ல தாமதமாகிறது. இதனால் தான் கால்களில் வீக்கம் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

பாதங்கள் மரத்துப்போவது
நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது மற்றும் நரம்பு அழுத்தப்படும் நிலையில் இருப்பதும் கால் மரத்துப்போகச் செய்கிறது, இது பொதுவாக சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அதேசமயம், உங்கள் கால்கள் நீண்ட நேரம் மரத்துப் போனால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இது இதயம் தொடர்பான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் படிக்க | கிரீன் டீ தெரியும்... கிரீன் காபி தெரியுமா... வியக்க வைக்கும் ஆரோக்கிய பலன்கள்!

பாதங்களில் வலி
கால்களில் வலி பொதுவாக ஒரு பொதுவான பிரச்சனையாகும் என்றாலும், சில அரிதான சந்தர்ப்பங்களில் இது இதயம் தொடர்பான சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். ஆனால் மாரடைப்பு வருவதற்கு முன்னரும் பாதங்களில் வலி வரலாம். எனவே மாரடைப்பு அதிக ஆபத்தில் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே மாரடைப்பு பிரச்சனை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.

பாதங்களில் பலவீனம்
உங்கள் கால்களில் பலவீனம் ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். போதுமான அளவு இரத்தம் பம்ப் செய்யப்படாததால் இது நிகழ்கிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் பாதங்கள் மற்றும் கால்களில் பலவீனம் போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, இந்தச் செய்தி உங்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியுடன் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எச்சரிக்கை! குடலை காலி செய்யும் சில ஆபத்தான உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News