இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பொட்டாஷியம் நிறைந்துள்ள சில உணவுகள்

பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 1, 2022, 06:11 PM IST
  • பொட்டாசியம் சத்து குறைபாடு மருத்துவத்தில் ஹைபோகாலேமியா என்று அழைக்கப்படுகிறது.
  • இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது.
  • பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான பொட்டாஷியம் நிறைந்துள்ள சில உணவுகள் title=

பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய துடிப்பை சீராக்கும் பொட்டாஷியம், இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. உடலுக்கு மிக முக்கியமான கனிமமான பொட்டாஷியம் நரம்புகளின் செயல்பாட்டை சரியாக பராமரிப்பதோடு, அதனை மேலும் சீராக்க உதவுகிறது. 

எனினும், பொட்டாசியத்தின் மிக முக்கியமான செயல்பாடு இதயத் துடிப்புக்கு உதவுவதாகும். உடலில் பொட்டாசியம் சத்து குறைபாடு தீவிரமாக இருந்தால், அந்த குறைப்பாடு மருத்துவத்தில் ஹைபோகாலேமியா என்று அழைக்கப்படுகிறது, ஒரு நபரின் உடலில் பொட்டாசியத்தின் அளவு லிட்டருக்கு 3.6 மில்லிமோல்களுக்குக் கீழே குறையும் போது இந்த நிலை ஏற்படுகிறது. 

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில், பொட்டாசியம் குறைபாடு காரணமாக  ஏற்படும் நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க, உணவில் பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

பொட்டாசியம் சத்து நிறைந்த உணவு பொருட்கள்

1. உருளைக்கிழங்கு

2. மாதுளை

3. அவகேடோ (வெண்ணெய் பழம்)

4.  வெள்ளை பட்டாணி

5. கீரை

6. சக்கரை வள்ளிக்கிழங்கு

7. இளநீர்

8. சோயாபீன்ஸ்

9. பீட்ரூட்

10. தக்காளி

பொட்டாசியம் இதயத் தசைகளின் சுருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவாக இருந்தால், இதன் காரணமாக இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாகி, வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன்  போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.

பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்துகிறது, இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பொட்டாசியம் சத்து உடலில் சோடியத்தின் அளவை பராமரிக்கவும் செயல்படுகிறது.

உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டால், அதன் காரணமாக பதட்டம்  அதிகரிக்கிறது. அதனால் அவரது தூக்கம் பாதிக்கப்பட்டு இரவில் தூங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது 

பொட்டாசியம் குறைபாடு  குடலில் உள்ள தசைகளையும் பாதிக்கிறது, இதன் காரணமாக உடலில் இருந்து உணவு மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேறும் செயல்முறையிலும் தாக்குதலை ஏற்படுத்துகிறது. செரிமான செயல்முறை குடலில் மெதுவாக இருந்தால், அது மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும்  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். ஜீ மீடியோ இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News