கொழுப்பைக் குறைக்கும் பானங்கள்: அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டால், உப்பு இல்லாத தக்காளி சாறு உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த சாறு இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், இது குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் இதை பற்றி பல ஆக்கப்பூர்வமான முடிவுகள் தெரியவந்துள்ளன.
தக்காளி சாறு குறித்து செய்யப்பட்ட ஆய்வு
'உணவு அறிவியல் & ஊட்டச்சத்து' இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக்காக, 184 ஆண்கள் மற்றும் 297 பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு உப்பு சேர்க்காத தக்காளி சாறு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவும் 5 சூப்பரான உணவுகள்!
மக்களின் இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சி
ஜப்பானின் டோக்கியோ மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆய்வின் முடிவில், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 94 பேரில் இரத்த அழுத்தத்தில் குறைவு பதிவு செய்யப்பட்டது.
சிவப்பு இறைச்சி தீங்கு விளைவிக்கும்
அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்ட 125 பேரின் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவு டெசிலிட்டருக்கு 155.0 மில்லி கிராமில் இருந்து 149.9 மில்லி கிராமாக குறைந்துள்ளதாகவும் ஆராய்ச்சியில் கூறப்பட்டது. அதே நேரத்தில், மற்றொரு ஆராய்ச்சின் படி, வெள்ளை இறைச்சிக்கு பதிலாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வது கொலஸ்ட்ராலுக்கு மோசமாக கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இந்த இரண்டு வகை இறைச்சிகளையும் உட்கொள்ளக் கூடாது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இந்த வகை புரதத்தை உட்கொள்ளுங்கள்
'தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில்' வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில் சிவப்பு இறைச்சி மற்றும் வெள்ளை இறைச்சியை அதிக அளவில் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மாறாக, காய்கறிகளிலிருந்து புரதத்தை பெறுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளை இறைச்சியின் நுகர்வு அதிகரித்தது
இந்த ஆய்வில், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலுக்கு தாவர புரதம் மிகவும் ஆரோக்கியமானது என்பதும் கண்டறியப்பட்டது. கடந்த சில தசாப்தங்களாக இதய நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இறைச்சி நுகர்வு விகிதம் குறைந்துள்ளது. மாறாக, வெள்ளை இறைச்சி நுகர்வு அதிகரித்தது.
மேலும் படிக்க | குழந்தை பெற்றுக்கொள்ள ஆண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR