குளிர்காலத்தில், பெரும்பாலானோருக்கு தீராத உடல் வலி ஏற்படும். குறிப்பாக கைகள், கால்கள், முதுகு மற்றும் கழுத்து தசைகளில் அதிகப்படியான அழுத்தத்தை அனுபவிக்க கூடும். உண்மையில், இந்த பருவத்தில் குறைவான வெப்பநிலை நிலவுவதாலும், குளிர் அதிகரிப்பதாலும், நம் உடலில் இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக எலும்புகளில் வலி தொடங்குகிறது. பல சமயங்களில் குளிர் காரணமாக உடலின் தசைகள் வீங்கி, வலி அதிகமாகும். குளிர் காரணமாக, நமது எலும்புகள் பலவீனமடைவதால், மூட்டு வலி, கீல்வாதம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி அதிகம் ஏற்படுவதோடு, சிலருக்கு எழுந்து உட்காரக்கூட சிரமப்படும் நிலை இருக்கும். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால், குளிர்காலத்தில் இங்கே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களில் சிலவற்றை முயற்சிக்கவும். இந்த வைத்தியத்தின் உதவியுடன், உங்கள் தசைகள் நிவாரணம் பெறும். உடல் வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய வீட்டி வைத்தியங்கள்
கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெய் எந்த விதமான வலிக்கும் அருமருந்து. இது வியக்கதக்க வகையில் பலன் தரும். தசை வலியிலிருந்து நிவாரணம் பெற, கடுகு எண்ணெயில் சில பூண்டு பற்களை சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சிறிது ஆறிய நிலையில், வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு, வலி இருக்கும் இடங்களில், கை, கால்களின் தசைகளை நன்கு மசாஜ் செய்யவும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, குளிர் காரணமாக சுருங்கிய தசைகளும் விரிவடையும். இதனால் வியக்கத்தக்க வகையில் நிவாரணம் (Health Tips) கிடைக்கும்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர்:
உங்கள் தசைகளில் வலி இருந்தால், தினம் இரவு வெதுவெதுப்பான உப்பு நீரை கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அதில் ஒரு பருத்தி துணியை நனைத்து, பின்னர் வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும். இது உங்கள் தசை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
இஞ்சி:
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இது வலி, வீக்கம், பிடிப்பு மற்றும் தசை விறைப்பு ஆகியவற்றை நீக்குகிறது. இஞ்சியை தவறாமல் உட்கொள்ளுங்கள். வலி கடுமையாக இருந்தால் கடுகு எண்ணெயில் இஞ்சி சாறு கலந்து தசைகளை மசாஜ் செய்யவும்.
பூண்டு எண்ணெய்:
சிறிதளவு கடுகு எண்ணெயில் தோலுரித்த பத்து பூண்டு, 25 கிராம் பார்சலி இலைகள் மற்றும் 10 கிராம் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் காய ஆரம்பித்து புகை வர ஆரம்பித்ததும் இறக்கி ஆறவைத்து கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும். குளிர்காலத்தில் முழங்கால்களில் இந்த எண்ணெயை மசாஜ் செய்தால் முழங்கால் வலி நீங்கும்.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் அதிகமாய் இருக்கா? இரவு உணவில் இவற்றை ஒதுக்கினால் போதும்!
மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
உடற்பயிற்சி செய்யுங்கள்:
குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யாமல், இருக்கவே கூடாது. அதில் சமரசம் செய்யாதீர்கள். பிடிப்புகள், தசை வலி அல்லது வீக்கம் தவிர்க்க, எப்போதும் உங்கள் உடலை ஸ்ட்ரெச் செய்து எளிய பயிற்சிகளை செய்யவும்.
உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்:
மேலும், குளிர்காலத்தில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம். முடிந்தவரை ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்: இந்த பருவத்தில், பெரும்பாலானோர் தண்ணீரை குறைவாக குடிக்கிறார்கள். அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஜே.என்.1 வகை கொரோனாவுக்குத் தடுப்பூசி தேவையில்லை: மத்திய அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ