வயசு ஆகும்…. ஆனா, ஆகாது: இந்த இயற்கையான வழிகள follow பண்ணுங்க!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களான மதுபானம் அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை உங்கள் வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2020, 04:40 PM IST
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே, நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளால் உடல் துடிதுடிப்புடன் இருக்கிறது.
  • சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுவதால், முகம், கைகள் மற்றும் பிற பகுதிகளில் தோலில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
வயசு ஆகும்…. ஆனா, ஆகாது: இந்த இயற்கையான வழிகள follow பண்ணுங்க!! title=

நமது உடல் டிரில்லியன் கணக்கான உயிரணுக்களால் ஆனது. அவை வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு உயிரணுக்கும் ஒரு ஆயுட்காலம் உள்ளது. அதன் பிறகு அது வளர்வது, செயல்படுவது மற்றும் பெருக்கப்படுவது நின்று விடுகிறது. இது மருத்துவ ரீதியாக செல்லுலார் செனென்சென்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நபரின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வயதாகும் செயல்முறையை எப்படி தாமதப்படுத்துவது

வயதாகும் செயல்முறையை (Aging Process) தாமதப்படுத்த சில ஆரோக்கியமான குறிப்புகள் உள்ளன. பொதுவாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே, நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். அதற்கான ஐந்து எளிய குறிப்புகள் இங்கே:

மதிய வேளையில் சூரிய ஒளியில் உங்கள் வெளிப்பாட்டைக் குறைக்கவும்:

சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு தோலை தொடர்ந்து வெளிப்படுத்துவது சருமத்தின் கீழ் இருக்கும் மீள் இழைகளை அழித்து, சருமத்தை சுருக்கமாகவும் தளர்வாகவும் ஆக்கும் என்று பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுவதால், முகம், கைகள் மற்றும் பிற பகுதிகளில் தோலில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. விடிகாலை சூருய ஒளி உடலிற்கு மிகவும் நல்லது. சூரிய ஒளி நம் உடலிற்கு தேவையான பல வைடமின்களையும் பிற நன்மைகளையும் தருகிறது. ஆனால், மதிய நேரத்து சூரிய ஒளி, நம் தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உணவில் உலர் பழங்களை சேர்க்கவும்:

பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற கொட்டைகள் பக்கவாதம், 2ஆம் வகை நீரிழிவு நோய், நரம்பு நோய்கள், இதய நோய்களை போன்ற வயது தொடர்பான நோய்களை தடுக்கும் திறனும் தாமதப்படுத்தும் திறனும் கொண்டுள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ALSO READ: ஒரு டீஸ்பூன் அளவு Corona Virus இதுவரை சுமார் 50 மில்லியன் மக்களை பாதித்துள்ளது

உங்கள் தூக்கம் முழுமையாக இருக்க வேண்டும்:

தொடர்ச்சியான தூக்கமின்மை காரணமாக, கரு வளையம், கரும் புள்ளிகள், வறண்ட கோடுகள் போன்ற வயதான அறிகுறிகள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே தோன்றும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. போதுமான தூக்கமின்மை உடலில் உள்ள ஏஜிங் செல் எனப்படும் வயது தொடர்பான செல்களை விரைவாக முதிரச் செய்கிறது. மேலும் தூக்கமின்மையால் சூரியனின் கதிர்களுக்கு எதிராக போராடும் சருமத்தின் திறனும் குறைகிறது.

உங்கள் உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிகம் சேருங்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகளால் உடல் துடிதுடிப்புடன் இருக்கிறது. தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி மற்றும் வெவ்வேறு வண்ண பெல் பெப்பர்ஸ் ஆகியவை லைகோபீன் நிறைந்தவை, இது ஒரு ஆண்டியாக்சிடண்ட் ஆகும். கொலாஜனேஸின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் சருமத்தை உறுதியாக வைத்திருக்க லைகோபீன் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜனை உடைக்கிறது.

ஆரோக்கியமற்ற பழக்கங்களை விட்டு விடுங்கள்:

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களான மதுபானம் அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை உங்கள் வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்தும். மதுபானம் உட்கொள்வது உடலில் ட்ரைகிளிசரைட்களின் அளவை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் இள வயதிலேயே கோடுகள், சுருக்கங்கள் மற்றும் பிற அறிகுறிகள் தோன்றும். மறுபுறம், புகைபிடித்தல் உடலில் வீக்கத்தை அதிகரிக்கிறது சருமத்தின் கீழ் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை சேதப்படுத்துகிறது. இது சிறு வயதிலேயே தோல் தொய்வு மற்றும் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.

ALSO READ: அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News