முடியை சரியான முறையில் பாதுகாப்பது எப்படி? இந்த 6 டிப்ஸை பின்பற்றுங்கள்..!

Hair Care Tips: கால சூழல் மாற்றங்கள், வெயில் போன்ற பல விஷயங்களால் நமது முடி பாதிப்படைகிறது. இதிலிருந்து முடியை பாதுகாப்பது எப்படி?  

Written by - Yuvashree | Last Updated : Jun 27, 2023, 08:45 AM IST
  • முடி பரமாரிப்பில் கவனம் தேவை.
  • முடியை குழந்தை போல கவனித்து கொள்ள வேண்டும்.
  • இந்த டிப்ஸை பின்பற்றுங்கள்.
முடியை சரியான முறையில் பாதுகாப்பது எப்படி? இந்த 6 டிப்ஸை பின்பற்றுங்கள்..! title=

நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாடு காரணமாகவோ வெயிலின் தாக்கம் காரணமாகவோ நம் முடியில் பொடுகு, முடி வெடிப்பு போன்ற பல பிரச்சனைகள் வருகின்றது. இவற்றை தடுப்பதற்கு சில சிம்பிளான வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால் நம் முடியை அழகாக செலவே இல்லாமல் பராமரிக்கலாம். அவை என்னென்ன வழிமுறைகள் தெரியுமா? 

1. சரியான ஷாம்பூவை உபயோகியுங்கள்:

பெண்கள் தங்கள் ஹேர்கேர் ரொட்டீனில் முதலில் செய்ய வேண்டியது உங்களுக்கான சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுப்பதுதான். சோப், ஷாம்பூ போன்ற விஷயங்களை தேர்ந்தெடுக்கையில் அதிக கவனம் தேவை. ஏனென்றால் நம் தோல் மற்றும் தலையில் உள்ள தசைகள் மிருதுவான பகுதிகள். சரியான ஷாம்பூவை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் பொடுகு பிரச்சனை, முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். நீங்கள் இயற்கை பொருட்களை உபயோகிப்பவராக இருந்தால் சீயக்காய் உபயோகித்து பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ தலையில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவது மட்டுமன்றி கேசத்தை அழகாக பராமரிப்பதாகவும் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | சப்போட்டா சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் நீங்கிவிடும்! ஆனாலும் இது முக்கியம்!

2.தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்:

என்னதான் லேபிள் ஒட்டி இது ”இயற்கையான ஷாம்பூ, இது அந்த மூலிகையில் இருந்து செய்யப்பட்ட ஷாம்பூ” என விளம்பரம் கொடுத்தாலும் அதில் சில ரசாயனங்கள் கலக்கப்படுவது மறுக்க முடியாத உண்மை. அதனால், தினமும் ஷாம்பூ போட்டி தலை முடியை அலச வேண்டாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஷாம்பூ போட்டோ குளித்தால் போதும். அப்படி அதிகம் உபயோகித்தால் அது உங்கள் முடி உடையவும் உங்கள் உச்சந்தலையை காய்ந்து போனது போலவும் ஆக்கி விடும். 

3.கண்டிஷனர் உபயோகிக்கலாம்:

பெண்களுக்கு முடி பராமரிப்புக்கான சரியான ஷாம்பூவைப் பயன்படுத்துவது நல்லது, ஆனால் அது மட்டும் எந்த உங்கள் தலைமுடியில் எல்லா மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே, ஷாம்பூவுடன் சரியான கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் முடி வகைக்கு ஏற்றவாறு சரியான கண்டிஷனரைப் பயன்படுத்துவது உங்கள் உச்சந்தலையிக்கும் நல்லது, கண்டீஷனர் உபயோகிப்பதால் உங்கள் தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும்.

4.அவ்வப்போது ட்ரிம் செய்யுங்கள்:

நம் உடலில் வெட்ட வெட்ட வளருவது இரண்டே பாகங்கள்தான். ஒன்று நகம், இன்னொன்று முடி. ஆனால் அதற்காக இவற்றை பராமரிக்காமல் இருந்துவிடக்கூடாது. அவ்வப்போது உங்கள் சிகையை கொஞ்சம் வெட்டி ட்ரிம் செய்ய வேண்டும். குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் முடியை வெட்ட வேண்டும் என சில சிக அலங்கார நிபுணர்கள் தெரிவிக்க்கின்றனர். 

5.எண்ணெய் வைத்து மசாஜ் செய்யுங்கள்:

தலையை மசாஜ் செய்வது, முடி பராமரிப்பில் முக்கிய அம்சமாகும். எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால் முடி வெடிப்பு, முடி உதிர்வு, பொடுகுத்தொல்லை போன்ற பல பிரச்சனைகளை போக்கலாம். தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளரும் வேர்களுக்கு நல்லது என சில தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

6. முடியை குழந்தை போல பார்த்துக்கொள்ளுங்கள்:

உங்கள் முடியும் உங்களை போல மென்மையான ஜீவன்தான் என்பதை மறவாதிர்கள். அதனால், பிறந்த குழந்தையை எவ்வளவு மென்மையாக பார்த்துக்கொள்வீர்களோ அதே போல உங்கள் கேசத்தையும் பராமரியுங்கள். சிக்கு எடுக்கிறேன் என்ற பெயரில் முடியை போட்டு இழுக்க வேண்டாம். இது உங்கள் முடி உடைய வழிவகுக்கும். இந்த பாதிப்பு அடி வேர் வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | Negative - Calorie Foods: அதிக கலோரிகளை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News