கரும்புச்சாறு ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா? எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

Sugarcane Juice Side Effects: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட உணவு வழிகாட்டுதல் படி, கோடையில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கரும்புச்சாறு தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 11, 2024, 05:50 PM IST
கரும்புச்சாறு ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா? எச்சரிக்கும் ஐசிஎம்ஆர் title=

ICMR, Sugarcane: கோடையில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க உடலுக்கு நீரேற்றத்தின் தேவை மிகவும் அவசியமாகிறது. நீர் ஒரு அதிசய பானம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீங்கள் தினமும் அடிக்கடி சாதாரண நீர் அருந்த முடியுமா? அப்படி அருந்தினாலும் ஒரு கட்டத்தில் அதன் சுவை பிடிக்காமல் போகலாம் அல்லது சலிப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உடலின் நீரேற்றத்திற்காக பழச்சாறுகளை எடுத்துக்க கொள்ளலாம். ஆனால் அனைத்து பழச்சாறுகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்றால், சில பழச்சாறுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். 

கரும்புச்சாறு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் -ஐசிஎம்ஆர்

இதைச் சுட்டிக்காட்டி, 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள உணவு வழிகாட்டுதலில், கோடையில் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கரும்புச்சாறு ஆரோக்கியமற்றது என்பதால் தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 100 மில்லிலிட்டர் கரும்புச் சாற்றில் சுமார் 13-15 கிராம் சர்க்கரை உள்ளது என்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கரும்புச்சாறு தவிர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

100 மில்லி லிட்டர் கரும்புச் சாற்றில் 13-15 கிராம் சர்க்கரை உள்ளது

இயற்கையாகவே கரும்பில் அதிக சர்க்கரை அளவு உள்ளது. எனவே அதன் நுகர்வு குறைவாக இருக்க வேண்டும். தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் (NIN) தரவுபடி, 100 மில்லிலிட்டர் கரும்புச் சாற்றில் 13 முதல் 15 கிராம் சர்க்கரை உள்ளது. கரும்பில் சுக்ரோஸ் எனப்படும் ஒரு வகை இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. கரும்புச் சாற்றில் 15 சதவிகிதம் சுக்ரோஸ் மற்றும் 15 சதவிகிதம் நார்ச்சத்து உள்ளது. 

மேலும் படிக்க - எகிறும் சுகர் லெவலுக்கு எமனாகும் நாவல் பழம்... பயன்படுத்தும் சரியான முறை..!!

நாம் எவ்வளவு சர்க்கரை அளவு  உட்கொள்ள வேண்டும்?

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, 18வயதுக்கு மேற்பட்டோர் உட்கொள்ளும் சர்க்கரை அளவு 30 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் 7 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் 24 கிராம் வரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். கரும்புச் சாற்றில் சில ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது.

சர்க்கரை அதிகமாக உள்ள பானங்கள்

கரும்புச்சாறை தவிர, சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், தேநீர், காபி மற்றும் பிற காஃபின் கலந்த பானங்கள், எனர்ஜி பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட பிற பானங்களை தவிர்க்குமாறு ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டுள்ளது.

உடலுக்கு பாதுகாப்பான உட்கொள்ளக்கூடிய 5 பானங்கள் பட்டியல்

இளநீர்: பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இயற்கை ஹைட்ரேட்டரின் சிறந்த ஆதாரமாக இளநீர் உள்ளது. உடலில் இருந்து இழந்த திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை மீண்டும் பெற உதவுகிறது.

மோர்: மோர் ஒரு குளிர்ச்சி பானமாகும். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

எலுமிச்சை நீர்: எலுமிச்சை நீர் கோடை காலத்தில் மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, எனவே இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தண்ணீர்: எந்தப் பருவமாக இருந்தாலும் உடலின் நீரேற்றத்தின் சிறந்த ஆதாரம் நீர். இது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடலின் செயல்பாடுகளை பராமரிக்கிறது.

மேலும் படிக்க - சுகருக்கே டாடா காட்டும் மூலிகை மசாலா.. நீரிழிவு நோயாளிகளுக்கு நோ டென்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News