செர்ரி பழம்: பார்க்க, உட்கொள்ள, ஆரோக்கியத்துக்கு... அனைத்திலும் சூப்பர்

Health benefits of Cherries: செர்ரிகளில் கலோரிகள் குறைவாக உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பிற நல்ல பொருட்கள் நிறைந்துள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 28, 2022, 07:32 PM IST
  • செர்ரிகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் உங்கள் உடல் சிறப்பாக செயல்படத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • இதனால் உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மை கிடைக்கும்.
  • செர்ரிகளில் மெலடோனின் மற்றும் அழற்சி எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன.
செர்ரி பழம்: பார்க்க, உட்கொள்ள, ஆரோக்கியத்துக்கு... அனைத்திலும்  சூப்பர்

Health benefits of Cherries: அனைவருக்கும் பிடித்த பழங்களில் செர்ரி பழமும் ஒன்றாகும். இவை இனிப்பு சுவை அதிகமாக உள்ள பழங்களாக இருப்பதோடு, இவற்றில் ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. இவற்றின் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இவற்றில் சக்திவாய்ந்த தாவர கலவைகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. செர்ரி பழங்களை உட்கொள்வதால் நமது உடலுக்கு கிடைக்கும் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

செர்ரிகளில் கலோரிகள் குறைவாக உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பிற நல்ல பொருட்கள் நிறைந்துள்ளன. செர்ரியில் வைட்டமின்கள் சி, ஏ மற்றும் கே ஆகியவை உள்ளன. நிண்ட தண்டுள்ள பழங்கள் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றை வழங்குகின்றன. அவை பீட்டா கரோட்டின் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்து கோலின் போன்ற ஆண்டி-ஆக்சிடெண்டுகளையும் அளிக்கின்றன. 

ஆன்டி-ஆக்சிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள்

செர்ரி பழங்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடெண்ட் கலவைகள் நிறைந்துள்ளன. அவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

இதயத்திற்கு நல்லது

செர்ரிகளில் பொட்டாசியம் மற்றும் பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள. அவை அவற்றின் சக்திவாய்ந்த இதயப் பாதுகாப்பு குணங்களுக்கு நன்கு அறியப்பட்டவை. ஆகையால் செர்ரி பழங்களை உட்கொள்வது இதயத்துக்கு மிக நல்லது. 

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது

செர்ரிகளில் மெலடோனின் மற்றும் அழற்சி எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன. இதன் காரணமாக இது நல்ல உறக்கத்துகு உதவுகின்றது, தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் செர்ரி பழங்களை சாப்பிடலாம். 

மேலும் படிக்க | பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா? ஓமத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க 

வொர்க்அவுட்டிற்குப் பிறகு விரைவாக மீண்டும் புத்துணர்ச்சி பெறலாம்

செர்ரிகள், குறிப்பாக புளிப்பு செர்ரி சாறு மற்றும் தூள், விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட உதவுவதோடு, உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி மற்றும் தசை சேதத்தை குறைக்கும். சாதாரண மக்களும் ஜிம்மில் உடற்பெயர்ச்சி செய்த பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி புத்துணர்சி பெற இது உதவும்.

சத்துக்கள் நிறைந்தது

செர்ரிகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் உங்கள் உடல் சிறப்பாக செயல்படத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மை கிடைக்கும்.

செர்ரி பழத்தை ஜூசாக செய்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். செர்ரி ஜூஸில் புரோந்தோசயனிடின்கள் எனப்படும் இயற்கை தாவர கலவைகள் உள்ளன. இது செரோடோனின் வெளியிடும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை அதிகரிக்கிறது. செரோடோனின் ஒரு இயற்கை கடத்தும் கருவியாகும். இது மனதை தளர்த்தி, அமைதியாக்கி தூக்கத்தை தூண்டுகிறது. எனினும் இந்த ஜூசை செய்யும் போது இதில் சர்க்கரை கலக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | ஞாபக மறதிக்கு குட்பை சொல்ல முடியும்! நம்பிக்கையளிக்கும் சீன விஞ்ஞானிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News