குழந்தைகளை அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் பார்த்துக்கொள்வது மிகவும் கடினம். இருப்பினும் அவர்கள் எதைத் தொடுகிறார்கள், கைகளைத் துப்புரவு செய்கிறார்களா இல்லையா, முகக்கவசங்களை சரியாக அணிந்திருக்கிறார்களா என இவை அனைத்தையும் நாம் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.
இந்த கோவிட் காலத்தில், நீங்கள் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்றால், அவர்களுக்கு தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருந்தாலும் கூட, உடனடியாக அவர்களுக்கு COVID-19 –கான பரிசேதனையை செய்வது மிக அவசியமாகும். ஒரு புதிய ஆய்வின்படி பெரும்பான்மையான குழந்தைகள் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகளைக் காட்டுவதில்லை.
கனடாவில் (Canada) நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் தொற்றுக்கு அறிகுறியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
CMAJ இதழில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வின்படி, கொரோனா வைரசால் (Corona Virus) பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அறிகுறியற்றவர்களாக உள்ளார்கள்.
COVID-19 நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட குழந்தைகள் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் ஒரு பகுதியினரே என்ற திடுக்கிடும் வெளிப்பாடை அந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
கனடாவின் ஆல்பர்ட்டாவில் 2,463 குழந்தைகளுக்கான முடிவுகளை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. அவர்கள் தொற்றுநோயின் முதல் அலையின் போது, அதாவது, மார்ச் முதல் செப்டம்பர் வரை, COVID-19 நோய்த்தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டனர்.
"பொதுவாக, சுகாதார கண்ணோட்டத்தில் உள்ள கவலை என்னவென்றால், சமூகத்தில் ஏராளமானோர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதை இன்னும் மக்கள் உணரவில்லை" என்று ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆய்வின் இணை ஆசிரியரான பின்லே மெக்லிஸ்டர் கூறினார்.
2,463 குழந்தைகளில், 1,987 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 476 பேருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது. ஆனால் தொற்று உறுதி செய்யப்பட்ட 714 பேரில், சுமார் 36 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த குழந்தைகள் தற்செயலாக வைரஸை பரப்பக்கூடும்.
மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு இருக்கும் இந்த நோயின் அறிகுறியற்ற தன்மை காரணமாக, கிறிஸ்மஸைத் தாண்டியும் நீண்ட காலத்திற்கு பள்ளிகளை மூடுவது சரியான முடிவாக இருக்கும் என்று மெக்அலிஸ்டர் கூறினார்.
"எங்களுக்குத் தெரிந்தவரை, பெரியவர்களை விட குழந்தைகள் நோய் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் அவர்கள் முற்றிலுமாக பரப்ப மாட்டார்கள் என கூற முடியாது.” என்று அவர் தெரிவித்தார்.
இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை புண் ஆகியவை கோவிட் -19 நோய்த்தொற்றுடைய குழந்தைகளிடையே காணப்பட்ட மிகவும் பொதுவான அறிகுறிகள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ALSO READ: Coronavirus Vaccine குறித்து அரசு செய்த மிகப்பெரிய அறிவிப்பு என்ன தெரியுமா
இருப்பினும், இந்த அறிகுறிகள் குழந்தைகளிடையே பொதுவானவை என்றும், குழந்தைகளிடம் இந்த அறிகுறிகளைக் கண்டால் நாம் அதை கொரோனா தொற்றுடன் (Corona Virus) தொடர்பு படுத்துவது மிகக் குறைவு என்றும் அவர்கள் கூறினர்.
“நிச்சயமாக, குழந்தைகள் பலவிதமான வைரஸ்கள் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். ஆகவே COVID-19-க்கான குறிபிட்ட அறிகுறிகளையும் நாம் கவனமாக கண்காணிக்க வெண்டும். சுவை மற்றும் வாசனை இழப்பு, தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தியெடுத்தல், மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்றவை குறிப்பிடத்தக்கவை.” என்று மெக்அலிஸ்டர் கூறினார்.
ALSO READ: Good news: Coronavirus Vaccine-க்கு ஒப்புதல், இன்னும் ஒரே வாரத்தில் மக்களை வந்தடையும்
"கோவிட் உள்ள சிலருக்கு எந்த வித உடல் ரீதியான சங்கடங்களும் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு தொற்று இருப்பதாகவே அவர்களுக்கு தெரிவதில்லை. இப்படிபட்டவர்கள் மற்றவர்களுடனும் பழகுவதால், அறியாமலேயே மற்றவர்களுக்கும் தொற்றை பரப்புகிறார்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் பொருந்தும்” என்பது ஆய்வாளர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR