உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் எலுமிச்சை... பயன்படுத்தும் முறை இது தான்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளின் உதவியை நாடுவது ஒரு புறம் இருந்தாலும், சில எளிய வைத்தியங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்துவது பலன் தரும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 29, 2024, 02:14 PM IST
  • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க எலுமிச்சையை பயன்படுத்தும் முறை
  • காலை உணவு என்பது ஒரு நாளின் முதல் உணவு.
  • பிபியை எப்போதும் கட்டுக்குள் வைக்க கடைபிடிக்க வேண்டியவை.
உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகும் எலுமிச்சை... பயன்படுத்தும் முறை இது தான் title=

Home Remedies For High Blood Pressure: உயர் இரத்த அழுத்தமானது மாரடைப்பு, , மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை பாதிப்பது, பக்கவாதம், சீறுநீரக பாதிப்பு, பார்வை இழப்பு போன்ற கடுமையான உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை அதிகரித்து வருவதற்கு, உடல் உழைப்பு மற்றும் மோசமான உணவு பழக்கம் ஆகிய காரணமாக இருக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளின் உதவியை நாடுவது ஒரு புறம் இருந்தாலும், சில எளிய வைத்தியங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்துவது பலன் தரும். இதன் மூலம் மருத்துவர் உங்கள் மருந்துகளின் அளவைக் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது.

வீட்டு வைத்தியம் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் (Blood Pressure Control) முயற்சியில், எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் அதை பல வழிகளில் பயன்படுத்தலாம். அதன் பயன்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க எலுமிச்சையை பயன்படுத்தும் முறை

எலுமிச்சை மற்றும் கருமிளகு

கருமிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். இரண்டையும் நன்றாக கலந்து குடிக்கவும். கருமிளகில் இருக்கும் பைபரின் பண்புகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகும் நேரத்தில், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும். இது படிப்படியாக பிபியை சீராக்கும். 

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு செய்து குடித்தால் குறையும். இதைப் பயன்படுத்த, ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது கல் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும். நீங்கள் அதை சாதாரண தட்பநிலை அல்லது குளிர்ந்த நீரில் செய்யலாம். இதனை தயாரித்து குடிப்பதன் மூலம் அதிக பிபியை குறைக்கலாம்.

எலுமிச்சை மற்றும் இலவங்கப்பட்டை

எலுமிச்சை சாறுடன் இலவங்கப்பட்டை கலந்து சாப்பிடுவதன் மூலமும் பிபியை கட்டுப்படுத்தலாம். இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு நல்லது. எலுமிச்சை சாற்றில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து. வெதுவெதுப்பான நீரில் இதை உட்கொள்வது பலன் அளிக்கும்.

மேலும் படிக்க | எலும்பும் தோலுமாக இருந்தால் சதையும் கறியுமாக கொளுகொளுன்னு மாறவைக்கும் சூப்பர் புட்கள்..!

பிபியை எப்போதும் கட்டுக்குள் வைக்க கடைபிடிக்க வேண்டியவை

உடற்பயிற்சி

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உங்களால் முடிந்த எளிய பயிற்சிகள் அல்லது நடைபயிற்சியை தினமும் மேற்கொள்வது அவசியம் தேவை. இதனல், உடலின் இரத்த ஓட்டம் சீராகி, எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாதோடு, உடலின் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பிற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு

காலை உணவு என்பது ஒரு நாளின் முதல் உணவு. காலையில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவை உட்கொள்வது, ஆற்றலை வழங்குவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். காலை உணவில் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களையும் சேர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வெள்ளை முடியை கருப்பாக்கும் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை, மருதாணி - எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News