பாப்பிலோமா வைரஸ்! HPV தொற்றுநோயின் மூலமும் உண்மையும்

ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று பற்றி தெரியுமா? மனித வாழ்க்கையில் இந்த தொற்று ஒருமுறையாவது ஏற்படாமல் இருக்காதாம்!  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2022, 10:37 AM IST
  • புற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்று
  • ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று அறிகுறிகள் என்ன?
  • HPV தொற்றை கண்டறிவது எப்படி?
பாப்பிலோமா வைரஸ்! HPV தொற்றுநோயின் மூலமும் உண்மையும் title=

புதுடெல்லி: ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று என்றால் என்ன? 

ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது தோலிலிருந்து தோல் தொடர்பு மூலம் பரவுகிறது. 100 க்கும் மேற்பட்ட HPV வகைகள் உள்ளன. அவற்றில் 40 க்கும் மேற்பட்ட வகை தொற்றுகள் பாலியல் தொடர்பு மூலம் பரவுகின்றன.

இந்த நோய்த்தொற்று பிறப்புறுப்புகள், வாய் அல்லது தொண்டையை பாதிக்கலாம்., HPV மிகவும் பொதுவான பாலியல் பரவும் தொற்று (STI) ஆகும்.

பிறப்புறுப்பு HPV நோய்த்தொற்றின் சில வகைகள் எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்றாலும், சில வகையான HPV தொற்று, பிறப்புறுப்பில் புண்களை ஏற்படுத்தும்.

ALSO READ | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா

அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது, ஆண் பெண் என இருபாலருக்கும் ஆசனவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்கள் ஏற்பட சிலவகை ஹெச்.பி.வி நோய்த்தொற்றுகள் காரணமாகின்றன.

HPV நோய்த்தொற்று ஏற்பட காரணங்கள்
HPV நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் தோலில் இருந்து தோலுடன் தொடர்பு மூலம் பரவுகிறது. பல்வேறுவிதமான பாலியல் செயல்களால் பிறப்புறுப்பு HPV தொற்று ஏற்படுகிறது.

HPV என்பது தோலில் இருந்து தோலுக்கு ஏற்படும் தொற்று என்பதால், பரவுவதற்கு உடலுறவு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலருக்கு HPV தொற்று இருப்பதே தெரியாது. HPV பாதித்த ஒரு தாய், குழந்தையை பிரசவிக்கும்போது, குழந்தைக்கு வைரஸ் பரவுவது என்பது அரிதினும் அரிதான சந்தர்ப்பம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!

HPV அறிகுறிகள்
பெரும்பாலும், HPV தொற்று ஏற்பட்டால் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் அல்லது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது.

உண்மையில், 90 சதவிகித நம்பகமான HPV நோய்த்தொற்றுகள் (10 இல் 9) இரண்டு ஆண்டுகளுக்குள் தானாகவே போய்விடும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதில் உள்ள மிகப்பெரிய அபாயம் என்னவென்றால், தனக்கு இந்த நோய்த்தொற்று இருப்பதே தெரியாமல், ஒருவர் பலருக்கு  HPVஐ பரப்பிவிடுவார்.

வைரஸ் தானாகவே மறைந்துவிடவில்லை என்றால், அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

மருக்களை ஏற்படுத்தும் HPV வகைகள், புற்றுநோயை உண்டாக்கும் வகைகளிலிருந்து வேறுபட்டவை. எனவே, ஹெச்பிவியால் ஏற்படும் பிறப்புறுப்பு மருக்களால் புற்றுநோய் ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது.  

viral infection

ஆண்களுக்கு HPV
HPV தொற்றுக்குள்ளான பல ஆண்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, இருப்பினும் சிலருக்கு ஆண்குறியில் மருக்கள் உருவாகலாம். ஆண்குறி, விதைப்பை அல்லது ஆசனவாயில் ஏதேனும் அசாதாரணமான வீக்கம் அல்லது புண்கள் இருந்தால் அது தொற்றாக இருக்கலாம் எனப்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்.

பெண்களுக்கு எச்.பி.வி
80 சதவீத பெண்கள் தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு வகை HPV தொற்றால் பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.  HPV தொற்று பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை, எந்தவொரு உடல்நலப் பிரச்சினையும் ஏற்படாமல் தொற்று தானாகவே போய்விடும்.

இந்தத் தொற்று ஏற்படும் சில பெண்களுக்கு பிறப்புறுப்பில் மருக்கள் ஏற்படலாம். பிறப்பு உறுப்பு, ஆசனவாயில், கருப்பை வாய் அல்லது சினைப்பையிலும் புண்கள் ஏற்படலாம்.  

பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியில் அல்லது அதைச் சுற்றி ஏதேனும் வீக்கமோ, புண்ணோ மருவோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ALSO READ | ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் 

HPV இன் சில விகாரங்கள் கர்ப்பப்பை வாய், ஆசனவாய் அல்லது தொண்டையில் புற்றுநோய்களை ஏற்படுத்தலாம். வழக்கமான பரிசோதனைகள் மூலமும், கர்ப்பப்பை வாய் செல்கள் மீதான DNA சோதனைகள் மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் தொடர்பான சோதனைகள் மூலம் HPV பாதிப்பையும், அதன் விகாரங்களையும் கண்டறிய முடியும்.

HPV சோதனைகள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் HPV சோதனை வேறுபட்டது. ஆண்களில் HPV ஐக் கண்டறிவதற்கான FDAவால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை எதுவும் தற்போது இல்லை.

பெண்கள் பேப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பாப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்ய வேண்டும்:

ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News