Fact Check: மொபைல் பயன்பாடு மூளைப் புற்றுநோயை ஏற்படுத்துமா?

அதிகமாக மொபைல் பயன்படுத்தினால் மூளைப் புற்றுநோய் ஏற்படுமா? என்ற கேள்விக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பதிலளித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 3, 2022, 02:08 PM IST
  • மொபைல் பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய்
  • அடிக்கடி சமூகவலைதளங்களில் பகிரப்படும் தகவல்
  • உண்மையா? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு
Fact Check: மொபைல் பயன்பாடு மூளைப் புற்றுநோயை ஏற்படுத்துமா?  title=

செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் மூளைக் கட்டிகள் உருவாகும் என்று சமூக ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் பகிரப்படுதை நீங்களும் கண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. சிலர் அந்த தகவலை அப்படியே இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? என்ற கேள்வியை உலகளவில் பலரும் எழுப்பியுள்ளனர். இது குறித்து ஆய்வில் இறங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் இந்த 6 அறிகுறிகள் தோன்றுமாம்

அதில், மொபைல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்ட நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு குழப்பமான விஷயங்கள் பகிரப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியின் மூலம் பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், தினசரி மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவதால் மூளைக் கட்டிகள் அல்லது மூளைப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்காது என தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மொபைல் மற்றும் மூளை புற்றுநோய்க்கு இடையே உள்ள தொடர்பைக் கண்டறிய, இங்கிலாந்தில் உள்ள 400,000க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு செய்தனர். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக கண்காணிக்கப்பட்டனர். ஆய்வில் ஈடுபட்ட 4 லட்சம் பேர் 50 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த ஆய்வு 2001 மற்றும் 2011-க்கு இடையில் நடத்தப்பட்டது. 

இவர்களிடம் தொலைபேசியை எப்போது, ​​எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கப்பட்டது. அவர்களின் பதில்கள் சுகாதார பதிவுகளுடன் பொருத்தப்பட்டு,  ஆய்வில் பங்கேற்றவர்களின் மூளையில் கட்டி உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டது.  அதில் உண்மையில்லை என தெரியவந்தது. அதேநேரத்தில் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் இதழில் வெளியான அறிக்கையின்படி, மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகள் மண்டை ஓட்டை ஊடுருவி மூளையை சென்றடைந்து புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. செல்போன்களால் புற்றுநோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளதாக ஒரு சில ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

மேலும் படிக்க | மூட்டுவலி - அஜீரணக்கோளாறுக்கு காரணமான இந்த உணவை சாப்பிடாதீர்கள்

கடந்த 20 ஆண்டுகளில் மூளைக் கட்டிகளின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு (WHO) தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறியது.  ஆனால் முழுமையற்ற தரவு காரணமாக அமைப்பு அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது. எனவே மொபைல் போன்கள் மூளை புற்றுநோயை ஏற்படுத்துமா? என்பது இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. விஞ்ஞானிகள் இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து வருகிறார்கள், விரைவில் அதற்கான பதிலைக் கண்டுபிடிப்பார்கள் என நம்புவோம். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News