Liver Disease: உடலில் இந்த பிரச்சனைகள் இருக்கா? ஜாக்கிரதை, கல்லீரலில் பாதிப்பு இருக்கலாம்

Liver Disease: கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2022, 07:01 PM IST
  • கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வெண்டும்.
  • இவற்றை நிச்சயம் புறக்கணிக்கக்கூடாது.
  • கல்லீரல் சேதத்தின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
Liver Disease: உடலில் இந்த பிரச்சனைகள் இருக்கா? ஜாக்கிரதை, கல்லீரலில் பாதிப்பு இருக்கலாம் title=

கல்லீரல் நோய் எச்சரிக்கை அறிகுறிகள்: கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். ஒரு நபரின் முழு ஆரோக்கியமும் இதைப் பொறுத்து உள்ளது. கல்லீரல் சரியாக வேலை செய்தால், எந்த நோயும் அருகில் அண்டாது. எனினும், கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கல்லீரல் நோய் தொடர்பான சில அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இதய நோய்க்கும் கல்லீரல் நோய்க்கும் இடையே வலுவான தொடர்பு பற்றி கூறப்பட்டுள்ளது. கல்லீரல் முழுமையாகப் பாதிப்படைய சில வருடங்கள் ஆகலாம். எனினும், எந்த அறிகுறியும் இல்லாமல், திடீரென கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அதற்கு, நீங்கள் ஒரு கடின மருந்தை சமீபத்தில் தொடர்ந்து பயன்படுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம்.

கல்லீரல் பாதிப்பில் இரண்டு வகைகள் உள்ளன:

கடுமையான பாதிப்பு

எந்த அறிகுறியும் இல்லாமல் உங்கள் கல்லீரல் சேதமடைந்திருந்தால், இதற்கு காளான் விஷம்  அல்லது மருந்துகளை அதிகமாக உட்கொண்டது காரணமாக இருக்கலாம். 

மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்! 

நாள்பட்ட வகை

இதில், கல்லீரல் படிப்படியாக மோசமடைகிறது. இது பின்னர் கல்லீரல் ஈரல் அழற்சிக்கு வழிவகுக்கும். இது அதிகப்படியான குடிப்பழக்கத்தின் காரணமாக ஏற்படக்கூடும்.

கல்லீரல் சேதத்தின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இவற்றை நிச்சயம் புறக்கணிக்கக்கூடாது.

கல்லீரல் சேதத்தின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்:

1. அடிக்கடி வாந்தியெடுத்தல்:

மீண்டும் மீண்டும் வாந்தி சங்கடம் ஏற்பட்டால், வாந்தி எடுப்பது போல் உணர்ந்தால், அது கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. 

2. பசியின்மை:

பசி இல்லாத உணர்வு இருந்தால், சாப்பிட விருப்பம் இல்லாமல் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இதுவும் கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். 

3. உடல் மஞ்சள் நிறமாதல்:

கல்லீரல் கெட்டுப் போக ஆரம்பித்தால் இரத்தப் பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக உடல் வெளிறிப் போகும்.

4. எடை இழப்பு:

கல்லீரல் செயலிழப்பால் திடீரென எடை குறையத் தொடங்குகிறது. இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் உடலில் இருந்தால், கண்டிப்பாக இவற்றை புறக்கணிக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | 'அந்த’ விசயத்துக்கு மட்டுமில்ல! ‘உடல் பருமன்’ பிரச்சனையையும் தீர்க்கும் அத்திப்பழம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News