Home Remedies To Remove Dark Black Neck: பளபளப்பான சருமம் நாம் அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக நமது சருமம் எப்போதுமே பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில் நாம் நம் கழுத்தை கவனித்துக்கொள்வதை மறந்து விடுகிறோம். நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுவப்பதில்லை. இதனால் கழுத்தில் படிந்திருக்கும் கருமையை புறக்கணித்துவிடுகிறோம். கழுத்து கருமை என்பது பலரை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கம் மற்றும் பல காரணங்களால் கழுத்தில் கருமை ஏற்படுகிறது. இந்நிலையில் கழுத்தில் கருமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை அகற்றுவதற்கான பாட்டி வைத்தியங்களை பற்றி தான் இன்று நாம் காணப் போகிறோம். அவற்றை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
கழுத்தின் கருமையை போக்க பாட்டியின் பக்காவான வீட்டு வைத்தியம் | Home Remedies To Clear Black Neck:
1. எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால், இவை சருமத்தை பொலிவாக்க உதவுவதுடன், கழுத்தின் கருமை நிறத்தை போக்கவும் உதவும். இதற்கு கழுத்தில் எலுமிச்சை சாற்றை தடவி 15-20 நிமிடம் வைத்து பின்னர் கழுவவும்.
2. தயிர் மற்றும் மஞ்சள்: ஒரு டீஸ்பூன் தயிரில் அரை டீஸ்பூன் மஞ்சளை கலந்து பேஸ்ட் தயார் செய்துக் கொண்டு, இந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவவும்.
3. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு துண்டுகளை கழுத்தில் தேய்க்கவும். உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள கூறுகள் கழுத்தில் ஏற்பட்டிருக்கும் கருமையை போக்க உதவுவதுடன் நிறத்தையும் மேம்படுத்துகிறது.
4. ஓட்ஸ் மற்றும் தக்காளி: ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். பின்னர் ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி ஜூஸைக் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, கழுத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரையிலும் காய விட்டு கழுத்தை கழுவவும். இது கழுத்திலுள்ள கருமை மாயமாய் மறைந்து போகும்.
மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!
5. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால், இது சரும நிறத்தை மேம்படுத்துகிறது. எனவே கழுத்தின் கருமை நிறத்தை போக்க சூடான தேங்காய் எண்ணெயை மசாஜ் செய்து வரவும்.
இந்த வீட்டு வைத்தியங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் கழுத்தின் கருமையை போக்கலாம். ஆனால் இந்த பிரச்சனை தீவிரமாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுவும்.
கழுத்து கருமையாவதற்கு என்ன காரணம்?
சூரியக் கதிர்களின் விளைவு: சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தால் கழுத்தின் தோல் கருமையாகிவிடும்.
சுத்தமின்மை: கழுத்தின் சுத்தத்தில் கவனம் செலுத்தாவிட்டால், அழுக்கு, தோல் எண்ணெய் மற்றும் பிற கழிவுகள் குவிந்து, கழுத்தின் நிறத்தை கருமையாக்கும்.
ஹார்மோன் மாற்றங்கள்: சில நேரங்களில் ஹார்மோன் மாற்றங்கள் கழுத்தின் நிறத்திலும் மாற்றங்களைத் தூண்டலாம். இந்த மாற்றங்கள் கர்ப்பம், பருவமடைதல் அல்லது ஹார்மோன் சிகிச்சையின் போது ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ