குடிநீர் வாரிய அலுவலகத்தில் மின்சார வாரிய துறை செயல் பொறியாளர் மது அருந்திக்கொண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? இந்த பதிவில் காணலாம்.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான சோழவந்தான் பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் உள்ள அமர்ந்து சமயநல்லூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம் மற்றும் மின்சார வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ் ஆகியோர் இருவரும் அலுவலகத்தில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சோழவந்தானில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ச்சியாக வந்து மது அருந்துவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி சம்பவத்தை முதல்வர் திசை திருப்புகிறார்-கார்த்தியாயினி குற்றச்சாட்டு!
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மின்சார வாரியத்தின் உயர் பொறுப்பில் உள்ள செயற்பொறியாளரே மிகவும் அலட்சியமாக அரசு அலுவலகத்தில் பணி நேரத்தில் மது அருந்தி கொண்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
குடிநீர் மோட்டார்களை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய சூழலில் அலுவலகத்தில் மது அருந்திக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கிய அலுவலகத்தை மது கூடமாக பயன்படுத்தி வருவதை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளச்சாரம் இருக்கிறது - தேமுதிக குற்றச்சாட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ