பதாஞ்சலியின் COVID-19 தடுப்பு மருந்தை பயன்படுத்த புதிய சிக்கல்...

யோகா குரு பாபா ராம்தேவ் ஊக்குவிப்பால் வளர்ந்து வரும் பதாஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், தயாரித்த கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா தடுப்பு மருந்து என விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 24, 2020, 09:52 AM IST
  • பதாஞ்சலி நிறுவனம் விளம்பரப்படுத்தும் கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா சிகிச்சை மருந்துகள் என விளம்பரப்படுத்த AYUSH அமைச்சகம் தடை விதித்துள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மருந்துகள் குறித்த விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
  • இந்த மருந்துகளின் முடிவுகள் சரிபார்க்கப்படும் வரை தவறான விளம்பரங்களை நிறுத்துமாறும் பதாஞ்சலி-க்கு AYUSH அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதாஞ்சலியின் COVID-19 தடுப்பு மருந்தை பயன்படுத்த புதிய சிக்கல்... title=

யோகா குரு பாபா ராம்தேவ் ஊக்குவிப்பால் வளர்ந்து வரும் பதாஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், தயாரித்த கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா தடுப்பு மருந்து என விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் கொரோனில் மற்றும் ஷ்வாஸர் மருந்துகளை கொரோனா தடுப்பு மருந்துகள் என பதாஞ்சலி நிறுவனம் பகிரங்கமாக அறிமுகம் செய்தது. மேலும் தங்கள் மருந்தை எடுத்துக்கொள்ளும் நபர்கள் 100% கொரோனாவில் இருந்து விடுப்படுவர் எனவும் நிறுவனம் கூறியது. 

READ | ராம்தேவின் கொரோனா சிகிச்சை: Coronil பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

இந்நிலையில் பதாஞ்சலி நிறுவனம் விளம்பரப்படுத்தும் கொரோனில்(Coronil) மற்றும் ஷ்வாஸர்(Swasar) மருந்துகளை கொரோனா சிகிச்சை மருந்துகள் என விளம்பரப்படுத்த ‘ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) அமைச்சகம்’ தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகக் கூறப்படும் மருந்துகள் குறித்த விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த மருந்துகளின் முடிவுகள் சரிபார்க்கப்படும் வரை தவறான விளம்பரங்களை நிறுத்துமாறும் பதாஞ்சலி-க்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

"கூறப்பட்ட விஞ்ஞான ஆய்வின் கூற்று மற்றும் விவரங்கள் அமைச்சகத்திற்குத் தெரியவில்லை ... COVID சிகிச்சைக்காகக் கோரப்படும் மருந்துகளின் பெயர் மற்றும் கலவை குறித்த ஆரம்ப விவரங்களை வழங்க பதாஞ்சலி ஆயுர்வேத் லிமிடெடிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • குறித்த மருந்து தொடர்பான ஆராய்ச்சி அளவு, சோதனை நடத்தப்பட்ட மாதிரி அளவு, தளங்கள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு அமைச்சகம் பதாஞ்சலி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது.
  • எனினும் பதாஞ்சலி மருந்து தொடர்பான விவரங்களை மத்திய அரசுக்கு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் தெரிவிக்கையில்., 
  • கொரோனிலின் மருத்துவ பரிசோதனைகள் குறித்து தேவையான அனைத்து விவரங்களையும் மத்திய அரசுக்கு பதாஞ்சலி அளித்துள்ளது. போதி தகவல்களை அளித்தப் பின்னரே செவ்வாயன்று நிறுவனம் மருந்தை அறிமுகம் செய்தது.
  • ஜெய்ப்பூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து இந்த தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் அகமதாபாத்தில் 280 நோயாளிகளுக்கு முதல் மருத்துவ கட்டுப்பாட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
  • சீரற்ற மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து நிலையான அளவுருக்களையும் 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது தொடர்பான அனைத்து தகவல்களையும் AYUSH அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளது.

READ | கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!...

Trending News