White Hair: நரை முடி கருக்க அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம்

White Hair Problem: இளமையில் கூந்தல் வெள்ளையாக மாற ஆரம்பித்தால், ரசாயனங்கள் அடங்கிய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கையான ஹேர் டையைப் பயன்படுத்தலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 1, 2022, 02:53 PM IST
  • வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை.
  • வெள்ளை முடி பிரச்சனை.
White Hair: நரை முடி கருக்க அற்புதமான இயற்கை வீட்டு வைத்தியம் title=

அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் மிக விரைவான மற்றும் மோசமான விளைவு முடியில் தோன்றத் தொடங்குகிறது. இதன் காரணமாக 25 வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனை ஏற்பட தொடங்குகிறது. இதனால் வெள்ளை முடியை மறைக்க மக்கள் ஹேர் டையைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவற்றில் உள்ள ரசாயனம் முடியை சேதப்படுத்துகிறது. உண்மையில், நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை முடி சாயத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் காரணமாக வெள்ளை முடியை கருப்பாக்குவது மட்டுமல்லாமல், முடி வலுவாகவும் நீளமாகவும் மாறும்.

இயற்கையான முடி சாயத்தை வீட்டிலேயே செய்வது எப்படி?
நரை முடியை போக்க நெல்லிக்காய் மற்றும் ஷிகாக்காயில் இருந்து இயற்கையான ஹேர் டையை நீங்கள் செய்யலாம். இதற்கு நீங்கள் பின்வரும் பொருள் மற்றும் முறையைப் பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம் 

தேவையான பொருள்:
- ஒரு கைப்பிடி உலர்ந்த நெல்லிக்காய்
- ஒரு சிறிய கிண்ணம் ஷிகாகாய் தூள்
- ஒரு கப் தண்ணீர்

இயற்கையான முடி சாயத்தை எப்படி செய்வது
* முதலில் ஒரு இரும்பு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* இதற்குப் பிறகு, இந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி உலர்ந்த நெல்லிக்காய் மற்றும் 1 சிறிய கிண்ணம் ஷிகாகாய் பொடி சேர்க்கவும்.
* இந்த கலவையை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் கேஸ்ஸை அணைக்கவும்.
* இப்போது இந்தக் கலவையை ஆறவிடவும். தண்ணீர் கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாறும், இதை மருதாணி தூரிகை மூலம் தலைமுடியில் தடவ வேண்டும்.
* நெல்லிக்காய் மற்றும் ஷிகாகாய் எப்படி முடிக்கு நன்மை பயக்கும்.

நெல்லிக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இது முடியை புதுப்பிக்க வேலை செய்கிறது. முடியின் வேர்களை வலிமையாக்குவதன் மூலம் ஊட்டச்சத்தை பெற உதவுகிறது. அதே நேரத்தில், ஷிகாகாய் முடியை கருப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News