Home Remedies: மன அழுத்தம் மற்றும் வெள்ளை முடி பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம்

வயதாவதற்கான அறிகுறிகள் மன அழுத்தத்தைக் கொடுக்கிறதா? மனதில் என்றும் இளமை இருந்தாலும் உடலில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியாது, ஆனால் அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2022, 03:30 PM IST
  • வயதாவதற்கான அறிகுறிகள் மன அழுத்தத்தைக் கொடுக்கிறதா?
  • மனதில் இளமை இருந்தாலும் உடலில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியாது
  • வயதாவதற்கான அறிகுறிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்
Home Remedies: மன அழுத்தம் மற்றும் வெள்ளை முடி பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம் title=

புதுடெல்லி: குழந்தைகள் எப்போது பெரியவர்களாக வளர்வோம் என்று ஏக்கப்பட்டால், பெரியவர்கள் எப்போதும் இளமையுடன் இருக்க ஆசைப்படுவார்கள்.

நாம் அனைவரும் வயதானதைப் பற்றி பயப்படுகிறோம், அதிலும் வயதாவதற்கான அறிகுறிகள் மன அழுத்தம் ஏற்படுத்தும் அளவு மோசமான தாக்கத்தையும் சிலருக்கு ஏற்படுத்துகிறது.

வயதாவதற்கான அறிகுறிகள் முதலில் ஒருவரின் சருமம் மற்றும் முடியில் தோன்றும். மனதில் என்றும் இளமை இருந்தாலும் உடலில் ஏற்படும் மாற்றங்களை தவிர்க்க முடியாது, ஆனால் அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

அதிலும் வயதாவதற்கு முன்னரே இளநரையால் பாதிக்கப்படுவது இன்றைய காலக்கட்டத்திலதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம், நரை முடி என்பது முதுமையின் நேரடி அறிகுறியாகும். இது மனரீதியாக பாதித்து நம்பிக்கையை குறைக்கும்.

25 வயதிற்குள் தலைமுடி நரைத்தால், அதை இளநரை என்று கூறலாம். முன்கூட்டிய வயதான அறிகுறிகள் வைட்டமின் பி 12 அல்லது தீவிரமான இரும்புச்சத்து குறைபாடினால் இருக்கும்.

உடலுக்கு போதுமான புரதம், ஜிங்க் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாத உணவு பழக்கமும் இளநரைக்கு காரணமாகிறது. 

மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள் 

இளநரையை எப்படி தடுப்பது
 தயிர், புதிய பழங்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். சத்தான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம், முடி நரைப்பதைத் தடுக்கலாம். முடியின் தரத்தையும் மேம்படுத்த இந்த உணவுகள் உதவும்.

ஆனால், ஏற்கனவே உருவான வெள்ளை முடியை என்ன செய்ய முடியும்? வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பல வைத்தியங்கள் உதவும். பொதுவாக தலைமுடிக்கு வண்ணம் பூசும் வழக்கம் பெரும்பான்மையானவர்களிடம் உள்ளது.

தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டு வைத்தியத்தின் மூலம் நரை முடியை குறைத்து கருப்பாக மாற்றலாம். ஒரு சுலபமான நரைமுடி சிகிச்சை இது.

மேலும் படிக்க | பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல காரணம் 

ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் இரண்டு தேக்கரண்டி கருப்பு தேயிலை இலைகளை எடுத்துக் கொண்டு அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.

தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்கவிட்டு பிறகு அடுப்பை அணைத்து விட்டு, கலவையை ஆற விடவும். நன்றாக ஆறியதும், தலைமுடியில் தடவவும்.

இது ஒரு இயற்கையான செயல்முறையான தலைச்சாயமாக இருக்கும். இந்த நடைமுறை உங்கள் தலைமுடியை பளபளப்பாகவும் மாற்றும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

இந்

Trending News